Enable Javscript for better performance
ஹலோ... பாட்டியம்மா..!- Dinamani

சுடச்சுட

    
    s17

    சனிக்கிழமை காலையிலேயே பாட்டியம்மாவின் போன் அழைப்புச் சத்தம் பேரன், பேத்தியை எழுப்பிவிட்டது.
     மாணிக்கத்தை முந்திக்கொண்டு ஹரிணி ஓடிவந்து போனை எடுத்தாள்.
     
     பாட்டி: என் அன்புப் பேத்தி ஹரிணிக்கு... பாட்டியின் "அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்....'
     பேத்தி: ஹய்யோ...!! எப்படிப் பாட்டி... இவ்ளோ ஷார்ப்பா என் பிறந்தநாளை ஞாபகம் வச்சிருக்கீங்க..?
     பாட்டி: ரொம்பச் சுலபம்... அக்டோபர்-15 ஆம் தேதி கலாம் சாரோட பிறந்தநாள் வருவதை நினைவில் வைத்துக்கொண்டால், அதற்கு முந்தைய நாள் உன்னுடைய பிறந்தநாள் வரும் என்பதும் நினைவுக்கு வந்துவிடுமே...
     பேரன் மாணிக்கம் (ஸ்பீக்கர் போனை ஆன் பண்ணிவிட்டு): பாட்டி... ஹரிணியோட பிறந்த தினத்திலே ஏதாவது விசேஷம் இருக்கா..?
     பாட்டி: ஹரிணியே ஒரு விசேஷம்; அவ பிறந்த நாளிலே விசேஷம் இல்லாம இருக்குமா..? இன்று "உலக தர தினம்' அதாவது "வேர்ல்டு ஸ்டேண்டர்டு டே' (ரர்ழ்ப்க் நற்ஹய்க்ஹழ்க்ள் ஈஹஹ்).
     பேத்தி: ஓகோ... அதனாலதான் நான் இவ்ளோ குவாலிட்டியா பிறந்திருக்கேன்...!
     பேரன்: !!!!!!!!
     பாட்டி: ஒவ்வொரு பிறந்தநாளின்போதும், நாம் சில நல்ல தீர்மானங்களை எடுத்துக்கொள்ளவேண்டும்....
     பேத்தி: சரி பாட்டி... இந்த பிறந்தநாளில் நான் என்ன தீர்மானம் எடுத்துக்கொள்வது..?
     பாட்டி: சொல்கிறேன் கேள்... ஆண்டுதோறும் அக்டோபர்-17 அன்று "உலக வறுமை ஒழிப்பு தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது...
     பேரன்: அப்படியா... "உலக வறுமை ஒழிப்பு தினம்' எதற்காகப் பாட்டி..?
     பாட்டி: நாம் மூன்று வேளையும் நன்றாக சாப்பிடுகிறோம்... ஆனால், உலகில் பல இடங்களில் மழையின்றி, விவசாயம் இன்றி, கடுமையான வறட்சியினால்... அல்லது, போர் மற்றும் வன்முறைகளினால்... ஒருவேளை உணவுகூட இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வறுமையினால் பட்டினி கிடக்கிறார்கள்... உதாரணமாக, ஈராக்கை அடுத்துள்ள சிரியாவில் பயங்கர வறுமைப் பீடித்திருக்கிறது. அந்த நிலைமையை முற்றிலும் மாற்றி, உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். உணவு, உடை, இருப்பிடம் இம்மூன்றும் ஒரு மனிதனுக்கு அத்தியாவசிய தேவையாகும்... அத்துடன், குடிநீர், சுகாதாரமான கழிவறை, கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ வசதி ஆகியவை அனைவருக்கும் கிடைக்கவேண்டும். இதற்காக, தனி நபர்களும், பெரு நிறுவனங்களும் ஒன்றுகூடி கூட்டாக வறுமையை ஒழிக்க உறுதியேற்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒன்றுகூடி வறுமைக்கு எதிராக மாபெரும் கோஷம் எழுப்பினர். இது நடந்தது 1987ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று. அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபை, 1992ஆம் ஆண்டுமுதல் அக்டோபர் 17ஆம் தேதியை "உலக வறுமை ஒழிப்பு தின'மாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. கூடியவரையில், நாம் உணவை குறைவாக உட்கொள்ளவேண்டும். உணவை வீணாக்குவது கூடவே கூடாது. நம் அருகில் இருக்கும் பசித்தவர்க்கு நம்மால் முடிந்த அளவு உணவு தந்து உதவவேண்டும். இதுபோன்ற தீர்மானங்களை இன்றுமுதல் நீ எடுத்துக்கொள்ளலாம்.
     பேத்தி: சரி... பாட்டி... அப்படியே செய்கிறேன்...
     பேரன்: "செய்கிறோம்'னு சொல்லு... பாட்டி... நானும் வறுமை ஒழிப்பில் பங்கெடுத்துக்கொண்டு என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன் பாட்டி...
     பாட்டி: கண்மணிகளே... ரொம்ப சந்தோஷம்...!!!
     
     -ரவிவர்மா
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai