அங்கிள் ஆன்டெனா

இயற்கையிலேயே பல சவால்களை விலங்குகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எதிரிகள், நோய், பசி, இயற்கைச் சீற்றங்கள் இப்படிப் பல சவால்கள்.
அங்கிள் ஆன்டெனா

கேள்வி:
 அதிக காலம் உயிர் வாழும் விலங்கு எது?
 பதில்:
 இயற்கையிலேயே பல சவால்களை விலங்குகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எதிரிகள், நோய், பசி, இயற்கைச் சீற்றங்கள் இப்படிப் பல சவால்கள்.
 இவற்றையெல்லாம் சமாளிக்கும் விலங்குகள் மட்டுமே அதிக காலத்துக்கு உயிர் வாழும். அதனால் விலங்குகளின் ஆயுளைத் துல்லியமாகக் கணக்கிடுவதில் பல சிக்கல்கள் உள்ளன.
 தோராயமாக மதிப்பிட்டுப் பார்த்தால் அனேகமாக திமிங்கிலங்களும் ஆமைகளும் 400 ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழ்வதாகத் தெரிய வந்திருக்கிறது.
 விலங்குகளின் வாழ்க்கை பற்றி உயிரியல் விஞ்ஞானிகள் ஏராளமான கணக்கெடுப்புகள் எடுத்து வைத்திருக்கின்றனர். அதன்படி பார்த்தால் சிசிலித் தீவில் 1766-ஆம் ஆண்டு முதல் 1918-ஆம் ஆண்டு வரை "கிராண்ட் டார்டாய்ஸ்' எனப்படும் பெரிய ஆமை 100 ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றது என்பது தெரிய வருகிறது.
 - ரொசிட்டா
 அடுத்த வாரக் கேள்வி
 மின்மினிப் பூச்சிகள் வெள்ளை நிறத்தில் மின்னுகின்றன. பிற நிறங்களில் மின்னும் பூச்சிகள் உள்ளனவா?
 பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம்
 நல்ல பதில் கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com