Enable Javscript for better performance
அங்கிள் ஆன்டெனா- Dinamani

சுடச்சுட

    

    கேள்வி: கல்லுக்குள் வசிப்பதாகக் கூறப்படும் தேரை எல்லா நாடுகளிலும் இருக்கின்றதா? இவை எப்படி முட்டை போட்டு அடைகாக்கும்?

    பதில்: பல நாடுகளில் பல வகையான தேரைகள் இருக்கின்றன. இவை தவளைக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
    நம் நாட்டில் "பாலிப்டோட்டிஸ்' என்ற வகை தேரைதான பெரும்பாலும் காணப்படுகிறது. இது முட்டையிடும்போது உடலில் இருந்து வெளிப்படும் "மியூக்கஸ்' என்ற திரவத்தைத் தண்ணீரோடு சேர்த்து ஒருவிதமான நுரைப் பூவை உருவாக்கும். நுரைக் குமிழிகள் ஒவ்வொன்றிலும் ஒரு முட்டை உட்கார்ந்து கொள்ளும். இந்த நுரைப்பூ தேரையின் அடிவயிற்றில் ஒட்டிக் கொள்ளும். குஞ்சுகள் பொரியும் வரை இந்தச் சுமையோடு உலா வரும்.
    ஐரோப்பிய நாடுகளில் வாழும் "அலைட்டில்' என்ற வகை தேரைகள் வித்தியாசமான ஒரு முறையைக் கையாளுகின்றன. இவைகள் முட்டையிடும்போது பிசின் போன்ற ஒரு திரவம் உண்டாகின்றது. இந்தப் பிசின் மூலம் முட்டைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு ஒரு முத்துச் சரம் போல மாறி விடுகின்றன. இந்த முட்டைச்சரத்தை, அப்பா தேரை தனது 
    பின்னங்கால்களில் சுற்றிக்கொண்டு பொறுப்போடு அடை காக்கின்றன. அப்பப்பா, இறைவன் படைப்பில் எவ்வளவு அதிசயங்கள் என்று ஆச்சரியப்படத் தோன்றுகிறதல்லவா?

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai