Enable Javscript for better performance
கடி- Dinamani

சுடச்சுட

    
    sm11

    ""எங்க அண்ணாவுக்கு நிறைய்ய்ய போன் வரும்!''
    ""அவ்வளவு போனை வெச்சுக்கிட்டு அவர் என்ன செய்வாரு!''
     

    டி.என்.ரங்கனாதன், 
    திருவானைக்கோவில், 620005.

     


    ""டேய், ஆத்திரத்திலே அறிவில்லாம உன்னைத் திட்டிட்டேன்....சாரிடா!''
    ""பரவாயில்லேடா.....ஆத்திரம் இல்லாத போதும்கூட நீ அறிவில்லாமதானே பேசுவே!''

    டி.என்.ஆர்., திருச்சி.


     

    ""எதுக்கு என்னைப் பார்த்து "முயல்' னு சொன்னீங்க டீச்சர்?''
    ""நல்ல மார்க் எடுக்க முயல்னு சொன்னேன்...''

    ஏ.நாகராஜன், பம்மல். 

     

    ""இவன் என் கூடப் பிறந்த தம்பி....எனக்கு தூரத்துச் சொந்தம்!''
    ""என்ன.... உளர்றே?''
    ""ஆமா....அவன் அமெரிக்காவுலே இருக்கான்!''

    பொ.பாலாஜி,
    அண்ணாமலைநகர் - 608002.

     

    ""கையிலே எப்பவும் கொஞ்சம் சில்லறை வெச்சுக்கணும்!''
    ""இல்லாட்டி?
    ""நாணயம் இல்லாதவன்னு சொல்லிடுவாங்க!''

    என்.பர்வதவர்த்தினி, 5, வீர ராகவன் தெரு,
    அண்ணா நகர், பம்மல். 

     


    ""இந்தியாவில் சணல் எங்கெல்லாம் கிடைக்கிறது?''
    ""எல்லா மளிகைக் கடைகளிலும் கிடைக்கிறது சார்!''

    எஸ்.கார்த்திக் ஆனந்த், குளத்தூர்,
    திண்டுக்கல்- 624005.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai