Enable Javscript for better performance
பொன்மொழிகள்!- Dinamani

சுடச்சுட

    
    sm8

    நாம் பிறரிடம் கண்டு பரிகாசம் செய்யும் குற்றங்கள் நமக்குள் நம்மையே பரிகாசம் செய்யும். - ப்ரெளன்

    எல்லா விஷயங்களிலும் நல்ல அம்சங்களைக் காணவே முயல்க. அநேகமாக ஒவ்வொரு விஷயத்திலும் நல்ல அம்சம் இருக்கும். - ஆவ்பரி.

    ஏளனம் என்பது சிறியோர் இதயத்தில் எழுகின்ற நச்சுப் புகையாகும்! - டென்னிஸன்

    குறை கூறுவது என்பது பிறர் மூலம் நம்மைச் சிறுமை செய்துகொள்வதே ஆகும்! - பால் ரிச்சர்ட்

    குறைகளைக் கண்டு மகிழ்ந்தால்,...குணங்களைக் கண்டு பெறும் நன்மையை இழந்து விடுவோம். - லாபுரூயர்

    குறைகள் காண்போர் அநேக சமயங்களில் களைகளுடன் நல்ல புஷ்பச் செடிகளையும் களைந்து விடுகின்றனர். - ரிக்டர்

    முடிவெடுக்கத் தெரியாமல் தடுமாறுபவர் எந்த ஒரு முயற்சியையும் துவங்கமாட்டார். முடிவு எடுக்கத் தெரிந்தவர் வாழ்க்கையில் வேகமாக முன்னேறிடுவார். - வாக்கர்

    நல்ல காரியங்களிலேயே ஓயாது ஈடுபட்டு தன்னை மிகவும் சிறியவனென்று எண்ணுவது ஒருவன் பணிவுள்ளவன் என்பதற்கு அறிகுறி. - டோவோர்ஸ்

    ஒரு செயலால் பெரும் அடையாளம் ஆயிரம் வார்த்தைகளால் ஏற்படுவதில்லை. - கிப்ஸன் 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai