Enable Javscript for better performance
அங்கிள் ஆன்டெனா- Dinamani

சுடச்சுட

    

    கேள்வி: உலகத்தில் தண்ணீர் குடிக்காத உயிரினங்கள் ஏதாவது இருக்கின்றனவா?

    பதில்: உலகில் மிகவும் குறைவாகத் தண்ணீர் குடிக்கிற அல்லது கொஞ்சம்கூடக் குடிக்காத உயிரினங்கள் நிறையவே இருக்கின்றன என்பது உலக அதிசயம்தான்...
    குறிப்பாக, பல்லிகள், அரணைகள், பாம்புகள் போன்ற ஊர்வன வகைப் பிராணிகள் வெறும் மாமிச உணவை மட்டுமே நம்பி வாழ்வதால், அவை விழுங்கும் உயிரினத்தின் உடல் திரவங்களே தண்ணீர் போல செயல்பட்டுவிடுகின்றன.

    பொதுவாக ஈரப்பதம் குறைந்த மற்றும் காய்ந்த திட, தாவர உணவுகளை உட்கொள்ளும் பிராணிகளுக்குத்தான் தாகம் ஏற்படுகிறது.

    வட அமெரிக்காவில் வாழும் கங்காரு எலி தன் வாழ்நாளில் தண்ணீரை முகர்ந்துகூடப் பார்ப்பது இல்லையாம். எனினும் சாறு நிரம்பிய தாவரங்களையும் இது உட்கொள்வதால் நீர் இதற்குத் தேவையில்லை.

    இதே போல சஹாரா பாலைவனத்தில் வாழும் "ஆடக்ஸ்' என்றழைக்கப்படும் ஒரு வகை மான் ஈரப்பதம் அதிகமுள்ள கள்ளிச் செடிகளை மட்டுமே உணவாகக் கொண்டு ஆயுசுக்கும் தண்ணீர் இல்லாமல் சமாளித்து விடுகிறதாம்.

    (தண்ணீர்க் கஷ்டத்தைத் தவிர்க்க இப்படிக்கூட வழிகள் உள்ளனவா? ஆச்சரியம்தான்)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai