Enable Javscript for better performance
நாயும் பூனையும்!- Dinamani

சுடச்சுட

    
    sm3

    சிறுவன் கண்ணன் வீட்டில் ஜிம்மி என்ற நாயும், ரோஸி என்ற பூனையும் வளர்ந்து வருகின்றன. சிறுவன் கண்ணன் பலமுறை முயன்றும் அவர்களுள் நட்பை வளர்க்க முடியவில்லை. காரணம் ரோஸியின் சுதந்திரம்தான்! அது சும்மாயிருக்காது!....அடிக்கடி ஜிம்மியின் அருகில் வந்து கேலியும், கிண்டலும் செய்யும். 
    ""சிறைக்கைதி போல உன்னை பகல் எல்லாம் சங்கிலியால் கட்டிப் போட்டு உள்ளார்கள். என்னை மாதிரி உன்னால் சுதந்திரமாக அங்குமிங்கும் பகலில் ஓடி விளையாட முடியுமா?'' என்று கேட்கும்.
    ஜிம்மி பதில் ஏதும் கூறாது. அமைதியாக இருந்துவிடும். ரோஸியின் சொல்லில் நியாயம் இருப்பதாக நினைக்கும். ரோஸி. ஜிம்மியை ஒருபோதும் மதிக்காது! அதன் அருகில் நிற்பதையே கெளரவக் குறைச்சலாக நினைக்கும். 
    கோடை விடுமுறைக்கு கண்ணன் பெற்றோர்களுடன் வெளியூரிலுள்ள தன் மாமா வீட்டிற்கு ஒரு மாதம் செல்வதாக ஏற்பாடு ஆகியிருந்தது. 
    அருகில் உள்ள வீட்டில் ஜிம்மிக்கும், ரோஸிக்கும் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள்! இப்பொழுது ஜிம்மியின் சங்கிலியை வீட்டின் பாதுகாப்பு கருதி அவிழ்த்து விட்டார்கள். 
    ரோஸிக்கு மிகவும் பயமாக இருந்தது. யாரும் இல்லாதபோது ஜிம்மியால் தனக்கு ஆபத்து வரும் என்று எண்ணி பிள்ளையார்கோயில் மரத்தில் இருந்து கொள்ளலாம் என முடிவு செய்தது. 
    தெருவில் நடந்து சென்றபோது வேறொரு தெருநாய் அதனைத் துரத்தியதால் பயந்து போய் தான் இருந்த வீட்டிற்குள் நுழைந்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட ஜிம்மி, தெருநாயைத் துரத்தி ரோஸியைக் காப்பாற்றியது. ரோஸி நிம்மதிப் பெருமூச்சு விட்டது!......ஜிம்மி ரோஸியை நட்புடன் பார்த்தது!
    தன் தவறை உணர்ந்த ரோஸி ஜிம்மியிடம் மன்னிப்பு கேட்டது! இரண்டும் சந்தோஷமாய் விளையாடின.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai