Enable Javscript for better performance
பரிவு!- Dinamani

சுடச்சுட

    
    sm4

    திருநெல்வேலி செல்வதற்கு விழுப்புரம் ரயில்வே நிலையத்தை நோக்கி ஆட்டோவில் பரமசிவம் அவர் மனைவி மற்றும் ஏழாவது படிக்கும் மகள் தேவியுடன் சென்று கொண்டிருந்தனர்.
    ""ஏம்ப்பா டிரைவர்... ஆட்டோவை கொஞ்சம் வேகமா ஓட்டு!.... ரயிலுக்கு நேரமாச்சு!'' என அவசரப்படுத்தினார் பரமசிவம். டிரைவரும் வேகத்தைக் கூட்டினார். 
    சற்று தூரம் சென்றதும் தேவி, ""'டிரைவர்!....இந்த பிளாட்பாரம் ஒரமா கொஞ்சம் நிறுத்துங்க!'' என ஆட்டோவை நிறுத்தச்சொல்லி பிளாட்பாரத்தில் இறங்கி வேகமாக ஓடினாள்! பதறிப்போன பெற்றோரும் பின் தொடர்ந்தனர். 
    அங்கே பிளாட்பாரத்தில் ஒரு மூதாட்டி மயங்கி விழுந்து கிடந்தாள். கடந்து சென்ற பலரும் கண்டு கொள்ளவில்லை. தேவி தன் கையிலிருந்த பாட்டில் தண்ணீரை அந்தக் கிழவி முகத்தில் தெளித்தாள். களைப்புடன் கண்களைத் திறந்த கிழவி "பசி' என சைகை காட்டினாள். 
    அப்பா ரயிலில் சாப்பிடுவதற்காக நாம கொண்டுவந்த பார்சலில் ஒரு பொட்டலத்தை ஆட்டோவில் இருந்து எடுத்துத்தாங்க!'' என்றாள். 
    ""ஏம்மா!.... ஏற்கெனவே தாமதமாயிடுச்சி....இந்த இருபது ரூபாயைக் கொடுத்துட்டு வா.... போகலாம்...'' என்றார் பரமசிவம்.
    ""இந்த இடத்தைச் சுற்றிக் கடை ஒன்றும் 
    இல்லை.... இந்த பாட்டி எதுவும் வாங்கிச் சாப்பிட முடியாது!...'' என்று கூறியவாறு உணவுப் பொட்டலத்தை ஓடிச் சென்று எடுத்துவந்து விரித்து கிழவியிடம் கொடுத்துவிட்டு இருபது ரூபாயையும் அவள் கையில் திணித்து ஆட்டோவிற்குத் திரும்பினாள். ரயில் நிலையத்தை அடைந்தார்கள். வண்டி புறப்படும் நேரத்திற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தது. 
    ""சரிதான்!.... ரயில் இந்நேரம் போயிருக்கும்!...'' என புலம்பியவாறே அவசர அவசரமாக அவளது பெற்றோர்கள் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தார்கள். ரயில் வண்டி முதலாவது பிளாட்பாரத்தில் இல்லை.... ஒலி பெருக்கியில், ""நெல்லை எக்,ஸ்பிரஸ் இன்னும் பத்துநிமிடம் தாமதமாக முதலாவது நடைமேடையை வந்து அடையும்...'' என்ற குரல் கேட்டது.
    பரமசிவம் நிம்மதிப் பெருமூச்சுடன் பெருமையாய் தன் மகள் தேவியை நோக்கினார். தேவியின் அம்மா அவளைக் கட்டிக் கொண்டாள்!

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai