Enable Javscript for better performance
பறக்கும் குதிரை!- Dinamani

சுடச்சுட

    
    sm11

    பறக்கும் குதிரை பரிசாய் வந்தால்
    பற்பல நாட்கள் பறப்பேன்!
    சிறந்த மக்கள் தெரிந்து கொள்ளத்
    தெளிந்த தமிழில் உரைப்பேன்!

    ஏணி எதற்கு? தோணி எதற்கு?
    ஏறிப் போவேன் மேலே!
    வானில் உள்ள விண்மீன் யாவும் 
    வாரி வந்து தருவேன்!

    நிலவை நானும் நெருங்கி நின்று 
    நேரில் பேசிப் பார்ப்பேன்!
    வளர்ந்தும் தேய்ந்தும் மாறிக் கொண்டே
    வந்த கதையைக் கேட்பேன்!

    எனக்குள் இனிக்கும் குறளை 
    எடுத்துக் கொடுப்பேன் தமிழில்!
    வணக்கம் சொல்லி வளரும் நிலவு
    வள்ளுவனோடு பேசும்!

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai