பொன்மொழிகள்!
By DIN | Published on : 08th September 2018 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

அன்பின்றி இறைவனை உணரமுடியாது.
- சாரதாதேவி
தாய் அன்பின் மறுபதிப்பு. - அரிஸ்டாட்டில் தவறை உணர்வதே அதைத் தவிர்ப்பதற்கான முதல் படியாகும்.
- ஸ்ரீஅன்னை
அன்பை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கமே மதம் எனப்படும்.
- விவேகானந்தர்
உண்மை சந்திரமண்டலத்தைவிட தூய்மையானது, சூரிய மண்டலத்தைவிட ஒளி மிக்கது!
- மஹாவீரர்
சோம்பலை நரக வேதனைகளில் ஒன்றாகக் கணக்கிட வேண்டும். அதை சிலர் இன்பங்களில் ஒன்றாகக் கருதுகிறார்கள்
- மாந்தேன்
உன் மனதில் உயர்ந்த லட்சியங்களும், எண்ணங்களும் இருக்கிறதா! அப்படியானால் நீ ஆண்டவன் சன்னிதானத்தில்தான் இருக்கிறாய்!
- ஸெனீக்கா
மற்றவர்க்குத் தீங்கு செய்யாதிருப்பதே சிறந்த நீதியாகும்!
- ஸிஸரோ
மனிதன் சிரிக்கக்கூடிய நிலையில் இருக்கும்வரை அவன் ஏழை இல்லை.
- எட்மண்ட் பர்க்.
அச்சமின்றி இருப்பது மட்டுமே தைரியமில்லை....
நீதிக்காகப் போராடும் மன உறுதிதான் "தைரியம்'...!
- புளூடார்க்