விடுகதைகள்
By DIN | Published On : 27th April 2019 11:22 AM | Last Updated : 27th April 2019 11:22 AM | அ+அ அ- |

1. என்னிடம் ஒரு தாள் உண்டு மடிக்க முடியாது. ஏராளமாய்ப் பணம் உண்டு எண்ண முடியாது. கண்ணைக் கவரும் ஆப்பிள் உண்டு, கடிக்க முடியாது. பளபளக்கும் வைரம் உண்டு பார்க்க முடியாது...
2. எனக்கு ஐந்து விரல்கள் உண்டு. ஆனால் ரத்தமும் சதை யும் இம்மியும் இல்லை...
3. மெல்லியதாய் இருக்கும், தண்ணீர் மேலேயே மிதக்கும். ஆயிரம் பேர் சேர்ந்தாலும் இதைத் தூக்க முடியாது...
4. உனக்குச் சொந்தமான பொருள் இது. ஆனால் இதை மற்றவர்கள்தான் அதிகம் உபயோகிப்பார்கள்...
5. ஒல்லியாய் இருப்பவராம், ஒற்றைக்கண் உடையவராம், உடம்பிலே பட்டாலோ "உஸ்' என்று கத்திடுவாய்...
6. செக்கச் சிவந்திருக்கும் வைக்கோல் கொடுத்தால் தின்னும், தண்ணீர் கொடுத்தால் சாகும்...
7. முன்னால் போனால் எவரையும் காட்டும், முதுகை உரித்தால் எதையுமே காட்டாது...
8. விடிந்தவுடன் வேலை செய்வான், வேலை இல்லையேல் மூலையில் நிற்பான்...
விடைகள்:
1. வானம், நட்சத்திரங்கள், நிலா, சூரியன்
2. கையுறை, 3. நீர்க்குமிழி, 4. பெயர், 5. ஊசி
6. நெருப்பு, 7. கண்ணாடி, 8. துடைப்பம்
-ரொசிட்டா