சுடச்சுட

  
  sm2

  அகில்குட்டியின் டைரி!
   இன்று மதியம் பள்ளி விட்டுவிட்டார்கள். நானும் ரகுவும் தண்ணீர் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். எனக்கும் ரகுவுக்கும் ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் அம்மா கொஞ்சம் பிஸ்கெட் கொடுத்திருந்தாங்க.... லஞ்ச் வீட்டிலே போய்த்தான் சாப்பிடணும்! எனக்கு கொஞ்சம் பசித்தது! என்னோட டப்பாவிலேர்ந்து ரெண்டு பிஸ்கெட்டை எடுத்தேன். வழியில் ஒரு மரத்தடியில் நின்று ஒரு பிஸ்கெட்டைக் கடித்தேன். இன்னும் மூணு பிஸ்கெட் இருந்தது.
   "ரகு உனக்கு வேணுமா?'' ன்னு கேட்டேன்.
   "வேணாம்க்கா!.... எனக்குப் பசிக்கலே... என் பிஸ்கெட்டை நான் எப்பவோ காலி பண்ணிட்டேன்!...'' என்றான் ரகு.
   எனக்கு தாகமா வேறே இருந்தது. கொஞ்சம்தான் தண்ணி இருந்தது. வகுப்பிலேயே பாதி குடிச்சுட்டேன்.தண்ணியைக் குடிக்கப் போன சமயம்.....
   ரோட்டிலே ஒரு தாத்தா ஏதோ சாமான்களோட தள்ளு வண்டி இழுத்துக்கிட்டிருந்தாரு.... வண்டியிலே பலகைசிலே செஞ்ச பெட்டிகள் அடுக்கியிருந்தது. அவருக்கு திடீர்னு மயக்கம் வந்துடுச்சு போலிருக்கு!.... ரொம்பக் களைப்பு போலிருக்கு!.... வண்டியை ஓரமா நிறுத்திட்டரு!....பாவம்!.... நாங்க தங்கியிருந்த மரத்
   தடிக்கு வந்தாரு.... எனக்கு அவரைப் பார்த்தா கஷ்டமா இருந்தது. நான் அவர்கிட்டே போனேன்....
   ""தாத்தா!.... இந்தாங்க தண்ணி குடிங்க?'' ன்னு சொன்னேன். என்னோட பாட்டில்லே கொஞ்சம்தான் இருந்தது. தாத்தா அதை ஒரே வாயிலே குடிச்சுட்டார்!
   ரகுவுக்கும் அவரைப் பார்த்தா ரொம்பப் பாவமா இருந்துச்சு!.... அவனும் அவர் கிட்டே போய், "இந்தாங்க தாத்தா!.... இன்னும் கொஞ்சம் வேணுமா'' ன்னு கேட்டான்!
   "குடு தம்பி!....'' அப்படீன்னார் தாத்தா. ரகு குடுத்தான். தாத்தா கிட்டே நான், "இந்தாங்க பிஸ்கெட் சாப்படறீங்களா?'' ன்னுகேட்டேன்.
   அவருக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது போலிருக்கு.... "நீ சாப்பிடு தாயி!...'' அப்படீன்னார்.
   "நான் சாப்பிட்டுட்டேன் தாத்தா!.... வீடு பக்கத்திலேதான் இருக்கு.... இப்போ போய் சாப்பிட்டுடுவோம்.... நீங்க சாப்பிடுங்க தாத்தா!....'' அப்படீன்னு சொல்லி அவருக்கு மீதியிருந்த மூணு பிஸ்கெட்டையும் கொடுத்துட்டேன்.
   தாத்தா அதை வாங்கிச் சாப்பிட்டார். அப்புறம் எழுந்துக்கிட்டார். வண்டியை தூக்கி நிறுத்தி இழுத்துக்கிட்டே போனார்.
   என் பசிக்கு அந்த ஒரு பிஸ்கெட் போறலேதான்... இருந்தாலும் உழைச்சுக் களைச்ச ஒரு தாத்தாவுக்கு உதவி செஞ்சோம்னு ஒரு திருப்தி இருந்தது.
   "ரகு, உன் பாட்டில்லே தண்ணி இருக்கா?... தாகமா இருக்குடா!'' ன்னுகேட்டேன்.
   "இல்லேக்கா, தாத்தா எல்லாத்தையும் குடிச்சுட்டாரு!....'' அப்படீன்னான் தம்பி.
   "பரவாயில்லே வா போலாம்!'' அப்படீன்னேன் நான்.
   பிரவுனி (அதான் எங்க நாய்க்குட்டி!)எங்களை வாலை குழையக் குழைய ஆட்டிக்கொண்டே பரபரன்னு வரவேற்றது!
   அகில் குட்டி
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai