கடி

"நான் சூடா ஒரு டீ அடிச்சுட்டு பரீட்சையிலே பாஸ் பண்ணேன்!.... நீ?''"நான் காப்பி அடிச்சுட்டுப் பாஸ் பண்ணேன்!'' 
கடி

* "நான் சூடா ஒரு டீ அடிச்சுட்டு பரீட்சையிலே பாஸ் பண்ணேன்!.... நீ?''
"நான் காப்பி அடிச்சுட்டுப் பாஸ் பண்ணேன்!'' 
மூர்த்தி, கோவை.

* "என்றா பசுபதி!....''
"1, 2, 3, 4, 5, 6, 7, ....'' 
"என்றா?....''
"அதான் எண்றோம்ல!....''
உமர் ஃபாரூக், 116/63, கல்வத்து நாயகம் தெரு, கடையநல்லூர் - 627731.

* "உன் பேர் என்ன?''
"வேலய்யா''
"நேத்தே வரச்சொல்லியிருந்தேனே ஏன் வரலே?''
"வேலைய்யா''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

* "எதுக்கு கம்ப்யூட்டர் முன்னாடி நின்னு, ஒரு வடை,... ரெண்டு இட்லி... ன்னு சொல்றே?''
"அதுலேதான் "சர்வர்' இருக்குமில்லே!''
ஏ.ஞானசேகர், பழையவிளாங்குடி.

✶ "அந்த எருமை மாடு கட்டிலிலேதான் தூங்கும்!...''
"ஏன்?''
"அதுதான் 'காட்'டெருமையாச்சே!''
கே.ஆர்.உதயகுமார், 38/75, பிடாரியார் கோயில் தெரு, முதல் மாடி, பின்கட்டு, சென்னை - 600001.

* "ஹோம் ஒர்க் நோட்டுலே வெரிகுட் போட்டிருக்கீங்களே அது யாருக்கு டீச்சர்?''
"அதிலே என்ன சந்தேகம்?....உனக்குத்தான்!''
"எங்கம்மாவுக்கோன்னு நெனைச்சேன்!''
பர்வதவர்த்தினி, சென்னை.

வாரம் 2 டி-சர்ட் பரிசு நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com