நாவடக்கம்!

தினேஷுக்கு காய்கறிகள் என்றாலே பிடிக்காது. அவனுக்கு மிகவும் பிடித்தவை நூடுல்சும், உருளைக் கிழங்கு வறுவலும்தான்!
நாவடக்கம்!

தினேஷின் உலகம்! 9
தினேஷுக்கு காய்கறிகள் என்றாலே பிடிக்காது. அவனுக்கு மிகவும் பிடித்தவை நூடுல்சும், உருளைக் கிழங்கு வறுவலும்தான்! ஆனால் அவன் பெற்றோரும், பாட்டியும் அவற்றைச் சாப்பிடவே கூடாது என்று தடுப்பார்கள். இதனால் வேண்டா வெறுப்பாக உணவை உண்பாள். காய்கறிகளை சேர்த்துக் கொள்ளாமல் பாதி சாப்பாட்டிற்கு மேல் எறிந்து விடுவான். இது தினந்தோறும் நடக்கும் கதை. 
ஆனால் பள்ளியில் மட்டும் உணவை எறிய முடியாது. காரணம், யாராவது ஒரு ஆசிரியர் இவர்கள் உணவு உண்ணும்பொழுது கண்காணித்துக்கொண்டே இருப்பார். ஆகவே அவர்கள் முன்பு நல்ல பிள்ளையாகக் கொண்டு வந்த உணவை வீணாக்காமல் சாப்பிட்டு விடுவான்.
அன்று மதியம் பாட வேளை தொடங்கியது. "வர்ற திங்கள் கிழமை எல்லோரும் எக்ஸ்கர்ஷன் போகப் போறோம்!.... 
எல்லோரும் கண்டிப்பா யூனிஃபார்ம்லதான் வரணும்!...'' என்றார் ஆசிரியர்.மாணவர்கள் உற்சாகத்தில் "ஹோ!...' வெனக் குரல் எழுப்பினர். 
"நான் எங்கப்பா கிட்டே கேட்டு 200 ரூபாய் வாங்கிட்டு வந்துடுவேன்'' என்றான் சதீஷ்.
"நான் எங்கண்ணாவோட டிஜிட்டல் கேமராவைக் கொண்டு வருவேன்!...'' என்றான் யஷ்வந்த்.
"நான் எங்கம்மா கிட்டே சொல்லி நிறைய ஸ்நாக்ஸ் செஞ்சு எடுத்துக்கிட்டு வருவேன்!'' என்றான் தினேஷ்.
இப்படி ஆளாளுக்கு ஒரு திட்டம் தீட்டிக் கொண்டனர். அந்த வாரம் போனதே தெரியவில்லை. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் பள்ளி விடுமுறை. தினேஷின் சீருடைகளைத் துவைத்துக் காலணிகளையும், காலுறைகளையும் சுத்தம் செய்து விட்டாள்அம்மா. ஞாயிற்றுக் கிழமை அவன் நண்பன் நியாஸுக்குப் பிறந்த நாள். அம்மாவிடம் 100 ரூபாய் வாங்கி அவனுக்குப் பரிசுப் பொருள் ஒன்றை வாங்கிக் கொண்டான் தினேஷ்.
அனைவரும் "ஹேப்பி பர்த் டே டு யூ!'' என்று பாடினர். ரியாஸ் கேக் வெட்டவும், மேலே கட்டியிருந்த பலூன் வெடிக்கவும் அதிலிருந்து காகிதப்பூக்கள் கொட்டவும் வேடிக்கையாக இருந்தது. ரியாஸின் பெற்றோர் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 
தினேஷ் தனக்குப் பிடித்த நூடுல்ûஸயும், உருளைக் கிழங்கு சிப்ûஸயும் ஒரு வெட்டு வெட்டினான். நூடுல்ஸில் இத்தனை வகைகளா?.... அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அத்தனையிலும் நிறைய வாங்கிச் சாப்பிட்டான். ஆசை தீர! வயிறே வெடித்து விடும் போல் ஆனது!
வீட்டுக்கு வந்தவுடன் அப்படியே படுத்து உறங்கினான். மாலை 6 மணிக்கு வயிற்றைப் புரட்டுவதுபோல் இருந்தது. எழுந்திருந்தவன் அப்படியே வாந்தி எடுத்தான். அடுத்த நிமிடம் வயிற்றை வலிக்கத் தொடங்கியது. தொடர்ந்து வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. பயந்து போன அம்மாவும், பாட்டியும், "பார்ட்டியிலே என்ன சாப்பிட்டே?'' என்று கேட்டனர். 
"வெறும் இட்டிலி மட்டும்தான் சாப்பிட்டேன்!...'' என்று பொய் சொன்னான். தொடர்ந்து வயிற்றுவலியும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. அவனை மருத்துவ மனையில் சேர்த்தனர். அவனைப் பரிசோதித்த மருத்துவர் "ஏதோ ஃபுட் அலர்ஜி ஆகியிருக்கு!.... அட்மிட் பண்ணி ட்ரிப்ஸ் ஏத்தணும்!'' என்று ஏதோதோ மருந்து எழுதிக் கொடுத்தனர்.
இதைக் கேட்ட அடுத்த நிமிஷமே, "ஐயோ!... நான் நாளைக்குக் கட்டாயம் ஸ்கூலுக்குப் போகணும்!....எல்லோரும் எக்ஸ்கர்ஷன் போகப் போறாங்க!'' என்று அழுதான்.
"உடம்பு சரியான பின்புதான் டிஸ்சார்ஜ் பண்ண முடியும்!'' என்று கறாராகக் கூறிவிட்டார் மருத்துவர்! போதாக்குறைக்கு ஊசி வேறு ஏற்றிக் கொண்டே இருந்தார்கள். திங்கட்கிழமை மாலைதான் அவன் உடல்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பியது. அன்று மாலை அவன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான். மறுநாள் செவ்வாய்க் கிழமை ஓய்வு எடுத்துக்கொண்டு புதன் கிழமை பள்ளிக்குச் சென்றவனை அத்தனை பேரும் நலம் விசாரித்தனர். 
சுற்றுலாவின் தான் எடுத்த புகைப்படங்களை டிஜிட்டல் கேமராவில் அவனுக்குக் காண்பித்தான் யஷ்வந்த். தினேஷுக்கு அழுகை, அழுகையாய் வந்தது. அதன் பிறகு அவன் நூடுல்சை கையால் கூடத் தொடுவதில்லை!....
என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com