ஊட்டச் சத்து சுரங்கம் கொடுக்கா புளி மரம் 

நான் தான் கொடுக்கா புளி மரம் பேசுகிறேன். எனக்கு கோண புளியங்கா, சீனி புளியங்கா, மணிலா புளி என வேறு பெயர்களும் உண்டு. எனது தாவரவியல் பெயர் பித்தேசெல்பியம் டல்சி என்பதாகும்.
 ஊட்டச் சத்து சுரங்கம் கொடுக்கா புளி மரம் 

மரங்களின் வரங்கள்!
 என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
 நான் தான் கொடுக்கா புளி மரம் பேசுகிறேன். எனக்கு கோண புளியங்கா, சீனி புளியங்கா, மணிலா புளி என வேறு பெயர்களும் உண்டு. எனது தாவரவியல் பெயர் பித்தேசெல்பியம் டல்சி என்பதாகும். நான் ஃபாசியே என்கிற பட்டாணி இனத்தைச் சேர்ந்தவன். ஆங்கிலத்தில் என்னை மங்கி பாட் என்று சொல்றாங்க. என் உடம்பெல்லாம் முள்முள்ளா இருக்கும் பயப்படாதீங்க. நானும் உங்களுக்கு நன்மை தான் செய்வேன். என் பூக்கள் பச்சை வெள்ளை நிறத்திலிருக்கும்.
 கொடுக்காய் புளி என்று சொன்னதும் உங்க தாத்தா, பாட்டிகளுக்கு பள்ளி ஞாபகம் வருமே. உங்க தாத்தா, பாட்டிக்கிட்டே என்னைப் பற்றி கேளுங்க, கதை, கதையா சொல்வாங்க. அவர்களின் பால்ய நாட்களை இனிமையாகவம், ஆரோக்கியமாகவும் மாற்ற நான் பெரிதும் உதவியிருக்கிறேன். நல்ல மருந்தாவேன் என்பதால், அப்போ எல்லாம், என் பழங்களை பள்ளியின் அருகிலேயே பாட்டிகள் விற்பாங்க. ஆப்பிள் வாங்க முடியாத ஏழை மாணவர்கள் என் பழத்தை வாங்கி சாப்பிடுவாங்க. யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வராமலா போகும். இப்போ எனக்கும் ஆப்பிள் போல மவுசு வந்துட்டுது. விலையும் அதே. கோடை விடுமுறை காலங்களில் நான் காய்க்கத் தொடங்குவேன். என் சுவை சற்று துவர்ப்பாக இருக்கும், என் பழத்தை குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க.
 வேலி ஓரத்தில் என்னை வளர்ப்பாங்க. ஏன்னா, நான் காற்று தடுப்பானாக இருந்து மற்ற பயிர்களுக்குப் பாதுகாப்பா இருப்பேன். நான் கடும் வறட்சியைத் தாங்கியும் வளருவேன். சதைப் பற்றுள்ள பழங்களை நான் தருவதால் நான் நல்ல உணவு பயிராகவும், சந்தையில் நல்ல விலை போவதால், அதிக வருமானம் ஈட்டவும் இப்போ என்னை வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்க.
 குடல் அழற்சி, பெருங்குடல் தொடர்பாக எந்தப் பிரச்னைகளுக்கும் நான் நல்ல மருந்து. என் பழத்தில் வைட்டமின் சி, ஏ, பி1, பி2, பி6 அதிகமாக இருக்கு. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, உடலில் உள்ள ஃப்ரீ ராடிக்கல்ஸ் உருவாகாமல் தவிர்த்து புற்றுநோயை வராமல் காக்கும்.
 என் பழத்தில் வைட்டமின் சி சத்தும் உள்ளது. என் பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து மற்றும் கால்சியம் இருக்கு. இது எலும்புகளையும். பற்களையும் பலப்படுத்தும். பாஸ்பரஸ் செல்களைப் புத்துயிராக்கும். இரும்பு சத்து உடல் சோர்வை நீக்கி, புத்துணர்ச்சியைக் கொடுத்து நரம்பு மண்டலத்தை ஊக்கப்படுத்துகிறது. இது தோல் மற்றும் நகம் மற்றும் முடியை வலுவடைய செய்கிறது.
 என் பழம் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பேன். அதனால், உங்கள் உடல் பருமன் குறையும். எங்கிட்ட வைட்டமின் இ, இருப்பதால் உங்களுக்கு நான் இளமையான தோற்றத்தைக் கொடுப்பேன். என் விதையில் டிரைடெர்பென் சப்பானின்ஸ் எனும் வேதிப்பொருள் உள்ளதால் நான் மூட்டு வீக்கத்தைக் குறைப்பேன். நான் கிருமிநாசினியாகவும், காச நோயை எதிர்க்கும் ஒரு எளிய மருந்தாகவும் இருக்கேன். என் மரத்தின் பட்டை பேதி, சீதபேதி, மலச்சிக்கல் மற்றும் காச நோய்கு உகந்த மருந்து. சர்க்கரை நோயை போக்கும் வல்லமை என்னிடம் உள்ளது. வாத நோய், மூட்டு வலி நோய்க்கு நான் நல்ல மருந்து. நெடுநாள் நோய்வாய்ப்பட்டு, உடல் தேறியவர்களுக்கு உடல்சூட்டினால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் என் பழத்தை சாப்பிடுங்க வயிற்றுப் போக்கு சட்டுன்னு நின்னுடும். வயிறு உப்புசம் ஏற்பட்டு ஜீரண சக்தி தடையை நான் போக்குவேன். குடல் நோய்க்கு என் பழம் நல்ல மருந்து.
 குழந்தைகளே, நீங்க அதிக எடையுடையவர்களாக இருந்தால் கவலைப்படாதீங்க, என் பழத்தை சாப்பிடுங்க படிப்படியா உங்கள் எடை குறையும். என் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யிலிருந்து சோப்பு தயாரிக்கிறாங்க. எண்ணைய் எடுத்தபின் கிடைக்கும் சக்கை கால்நடைகளுக்கு புண்ணாக்காகப் பயன்படுது. என் இலைகளை கால்நடைகள் விரும்பில் உண்ணும். என் மரத்திலிருந்து மரச்சாமான்கள் தயாரிக்கலாம். மரங்களைப் பேணுங்கள், மனிதராய் மாறுங்கள். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
 (வளருவேன்)
 - பா.இராதாகிருஷ்ணன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com