கடி

"டீச்சர் எனக்கு இன்னிக்கு உடற்பயிற்சி கொடுத்தாங்க!....''"அப்படியா?''
கடி

* "அவார்டு வாங்கின ஊர் எது?''
"தெரியலையே,.... நீயே சொல்லு!''
"விருது நகர்!''
க.நாகமுத்து, குளத்தூர் -624005.

* "டீச்சர் எனக்கு இன்னிக்கு உடற்பயிற்சி கொடுத்தாங்க!....''
"அப்படியா?''
"அதெல்லாம் ஒண்ணுமில்லே,....தோப்புகரணம் போடச் சொன்னதை கெளரவமா சொல்லிக்கிறான்!''
ஏ.நாகராஜன், பம்மல்.

✶பரவாயில்லையே!.... 25 ஆவது ரேங்க்தானே வாங்குவே!.... இப்போ 24 வது ரேங்க் வாங்கியிருக்கியே, எப்படிடா?''
"ஒரு பையன் வேறே ஸ்கூலுக்கு மாத்திக்கிட்டுப் போயிட்டாம்ப்பா!''
தீ.அசோகன், 18/13, நடராஜ தோட்டம், முதல் தெரு, திருவொற்றியூர், சென்னை - 600019.

* "உங்க வாத்தியார் நின்னுக்கிட்டேதான் பாடம் நடத்துவாராமே?''
"ஆமாண்டா,... தெய்வம்டா அவரு!''
"அப்படியா?''
"ஆமா!.... தெய்வம் நின்றுதான் கொல்லும்!''
வி.ரேவதி, தஞ்சாவூர்

* "வாழைப் பழம் தின்கிற போட்டியிலே தோற்றுப் போயிட்டேன்!...''
"அப்ப தோலியை ஏத்துக்கிறயா?''
"தோலியா?....''
"சாரி,.... தோல்வியை ஏத்துக்கிறயான்னு கேட்டேன்!''
பர்வதவர்த்தினி, சென்னை.

✶"தாத்தாவோட கடிகாரம் நின்னு போச்சுப்பா!''
"அது பழைய கடிகாரம்டா,.... சாவி கொடுடா, 
சரியாயிடும்!''
"அதான்பா!.... ரொம்ப நேரமா கொடுத்துக்கிட்டு இருக்கேன்பா,.... அது வாங்கிக்க 
மாட்டேங்குது!''
பத்மா சாரதி, 14, இராம மஹேஸ்வரி நகர், சுந்தரம் நகர், 10 ஆவது தெரு, மங்களபுரம், எம்.சி.ரோடு, தஞ்சாவூர் - 613004.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com