பூவும் குழந்தையும்!

பூவே பூவே புதுப்பூவே - நீ பொழுது விடிந்ததும் ஏன் பூத்தாய்?
பூவும் குழந்தையும்!

பூவே பூவே புதுப்பூவே - நீ
 பொழுது விடிந்ததும் ஏன் பூத்தாய்?
 வா! வா! குழந்தாய்! சொல்கின்றேன் - நல்ல
 வாசம் கொடுக்க நான் பூத்தேன்!
 
 பூவே! பூவே! புதுப்பூவே - நீ
 புதுப்புது நிறங்கள் ஏன் படைத்தாய்?
 ஆவல் கொண்ட உலகுக்கே }நான்
 அழகு கொடுக்க நிறம் படைத்தேன்!
 
 பூவே! பூவே! புதுப்பூவே! - நீ
 புதுச்சுவைத் தேனை ஏன் கொடுத்தாய்?
 கூவித் திரியும் வண்டெல்லாம் - வந்து
 குடித்து மகிழத் தேன் கொடுத்தேன்!
 
 உனக்கிங்கு உதவி யார் செய்தார்? - நீ
 உதவி பிறருக்கு ஏன் செய்தாய்?
 எனக்கிங்கு இறைவன் உதவி செய்தான்! - அதை
 எண்ணிப் பிறர்க்கு நான் செய்தேன்!
 
 பண்ணுருட்டி பரமசிவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com