Enable Javscript for better performance
கருவூலம்: ஆஸ்திரேலியா ஓஷியானிக் கண்டத்தில் இருக்கும் நாடுகள்!- Dinamani

சுடச்சுட

  

  கருவூலம்: ஆஸ்திரேலியா ஓஷியானிக் கண்டத்தில் இருக்கும் நாடுகள்!

  By DIN  |   Published on : 24th August 2019 03:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sm4


  நியூசிலாந்து! 
  NEWZELAND

  தலைநகரம் - வெலிங்டன்.
  பரப்பளவு - 2,68,680 ச.கி.மீ.
  நாணயம் - நியூசிலாந்து டாலர்.
  பேசும் மொழி - ஆங்கிலம், மாவோரி.
  ஆட்சி மொழி - ஆங்கிலம்.
  சமயம் - கிறிஸ்தவம்
  சுதந்திர தினம் - 26.9.1907.

  டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்காக கடல் மார்க்கம் காண முயன்று வந்த அபல் டாஸ்மான் கி.பி. 1642-இல் முதன் முதலில் ஒரு புதிய தீவைக் கண்டுபிடித்தார். ஆஸ்திரேலியாவிற்கு தென்கிழக்கே சுமார் 1930 கிலோ மீட்டர் தொலைவிலிருந்த அந்தத் தீவுக்கு "ஆடேரோ' என்று பெயரிட்டார். ஆ டே ரோ என்பதற்கு "நீண்ட பிரகாசமான உலகம்' என்று பொருள். இதன்பின் 1770-இல் ஜேம்ஸ் குக் இங்கு கடல் மார்க்கமாக வந்தபோது 1488 கிலோ மீட்டர் நீளமுள்ள தீவுக் கூட்டங்களைக் கண்டறிந்தார். இத்தீவுக் கூட்டங்களோடு அபல் டாஸ்மான் கண்டறிந்த ஆடேரோ தீவும் சேர்த்து நியூசிலாந்து என்று அழைக்கப்பட்டது. 

  நியூசிலாந்து பல தீவுகளைக் கொண்டிருந்தபோதும் மூன்று தீவுகள் மட்டுமே முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கின்றன. நாட்டின் வடக்குப் பகுதியை "வடதீவு' என்று அழைக்கின்றனர். மலைகளும், குன்றுகளும் நிறைந்திருப்பதோடு எரிமலைக் குழம்புகள் படிந்த பீடபூமி பிரதேசமாகவும் திகழும் இப்பகுதியில் உள்ள சில மலைகள் புகைந்து கொண்டே இருக்கின்றன. வெந்நீர் ஊற்றுகளும், எரிமலைகளும் நிறைந்து காணப்படும் வடதீவை “நஙஞஓவ ஐநகஅசஈ” என்றும் அழைக்கின்றனர். 

   நியூசிலாந்தின் தெற்குப் பகுதியை "தெற்குத் தீவு' என்றும் "மரகதக் கல் தீவு' என்றும் அழைக்கின்றனர். இங்குதான் தெற்கு ஆல்ப்ஸ் மலை உள்ளது. இம்மலையில் நியூசிலாந்தின் உயர்ந்த சிகரமான ஆவோராக்கி சிகரம் அமைந்துள்ளது. மலையின் வடக்குப் பகுதியில் பனியாறுகளும், வெண்பனி மூடிய மலை முகடுகளும் இருக்கின்றன. ஏரிகள் நிறைந்துள்ள மலையின் வடகிழக்குப் பகுதி "காண்டர்பரி சமவெளி' என்றழைக்கப்படுகிறது. இப்பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. 

  தெற்குத் தீவின் தென்முனையில் உள்ள மூன்றாவது தீவு "ஸ்டூவர்ட் தீவு' என்றழைக்கப்படுகிறது. 

  நியூசிலாந்தின் ஆதிவாசிகளுக்கு "மோரிஸ்' என்று பெயர். இவர்கள் தங்கள் மூதாதையர்கள் ஹவாய் தீவிலிருந்து இங்கு வந்து குடியேறியதாகக் கூறுகின்றனர். ஜேம்ஸ் குக் இங்கு வந்து சென்றபின் கிறிஸ்தவ மத போதனையாளர்கள் வந்தனர். அவர்களுக்குப்பின் 1797-ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய வர்த்தகர்கள் தொடர்ந்து இங்கு வர ஆரம்பித்தனர். 1840- இல் பிரிட்டன் நியூசிலாந்தை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. 

  பிரிட்டனின் காலனி ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்ற இந்நாட்டிற்கு நில எல்லைகள் கிடையாது. 

  எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, சுண்ணாம்புக் கல், தங்கம், இரும்புத்தாது முதலிய கனிமங்கள் கிடைக்கின்றன. 

  வாய்காடோ, குளுதா, ராகிடாகி, மனாவது ஆறுகள் பாய்ந்து நாட்டை வளப்படுத்துகின்றன. ஓட்ஸ், கோதுமை, சோளம், பார்லி, வெங்காயம், ஆப்பிள், பருப்பு வகைகள் பிரதான விளைபொருட்களாகும். 

  ஏராளமான ஆடு, மாட்டுப் பண்ணைகள் மூலம் கால்நடைகள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. நாட்டின் ஏற்றுமதியில் மூன்றின் ஒரு பங்கை ஆட்டு ரோமங்கள் வகிக்கின்றன. ஏறக்குறைய 47 மில்லியன் ஆடுகளிலிருந்து ரோமத்தை ஷிரீஸ் என்ற இயந்திரம் மூலம் அறுவடை செய்கின்றனர். மரவளம் நிறைந்த காடுகள் உள்ளன. ஆக்லாந்து நகரின் வடபகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் வளரும் "காரி' என்ற ஒருவகை பைன் மரங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. 120 அடி உயரம் வரை வளரும் இம்மரங்களில் சில 16 அடி சுற்றளவு கொண்டவைகளாகும். 

  பால் பொருட்கள், இறைச்சி, மரங்கள் தவிர சுற்றுலா, வங்கித் தொழில் மூலமும் வருமானம் ஈட்டப்படுகிறது. போக்குவரத்து சாதனங்கள், ஜவுளி உற்பத்தி, உணவுப் பதப்படுத்துதல், மரப்பொருட்கள் உற்பத்தி, கம்பளி தயாரிப்பு முதலிய தொழில்களும் உள்ளன. 

  ஆக்லாந்து, வாங்கரை, மார்ஸ்டென் பாயின்ட், தெளரங்கா ஆகியவைகள் துறைமுக நகரங்களாகும். 

  3. சாமோயா
  INDEPENDENT STATE OF SAMOA.

  தலைநகரம் - ஏபியா.
  பரப்பளவு - 2,944 ச.கி.மீ.
  நாணயம் - யு.எஸ்.டாலர். 
  பேசும் மொழி - ஆங்கிலம், சாமோயன்.
  ஆட்சி மொழி - ஆங்கிலம், சாமோயன்.
  சமயம் - கிறிஸ்தவம்
  சுதந்திர தினம் - 1.1.1962.

  தென் மத்திய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சாவாய், உபோலு, மனோனோ, அபேர்லிமா ஆகிய நான்கு தீவுகளுடன் சில சிறு சிறு பவளப் பாறைகளும் சேர்ந்த பகுதியே "சாமோயா' என்றழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் "மேற்கு சாமோயா' என்று இப்பகுதி அழைக்கப்பட்டது.

  ஐ.நா. அறிவுறுத்தலின்படி நியூசிலாந்தின் ஆளுகையிலிருந்த சாமோயா 1962-இல் சுதந்திரம் பெற்றது. 

  பெரும்பகுதி எரிமலைகளாலும், காடுகளாலும் சூழப்பட்டுள்ள இந்நாட்டில் கனிமவளங்கள் ஏதுமில்லை. 

  தேங்காய், கொப்பரை, வாழை, சேனைக்கிழங்கு, காப்பி, கோகோ விளைபொருட்களாகும். 

  மீன் பிடித்தல், விவசாயம் தவிர மோட்டார் வாகன உதிரி பாகங்கள், கட்டட உபகரணங்கள் தயாரித்தல், உணவு பதப்படுத்துதல், பாய், மரவுரி தயாரித்தல் முதலிய தொழில்களும் உள்ளன. 

  அடிக்கடி வீசும் புயல் காற்றினால் சேதங்களை சந்திக்கும் நாட்டின் வருவாய் மூலமாக தேங்காய் மற்றும் அதுசார்ந்த பொருட்களின் ஏற்றுமதி திகழ்கிறது. 

  4. நெளரு
  INDEPENDENT STATE OF SAMOA.

  தலைநகரம் - யாரென் நெளரு.
  பரப்பளவு - 21.3 ச.கி.மீ.
  நாணயம் - ஆஸ்திரேலியன் டாலர்.
  பேசும் மொழி - ஆங்கிலம், நெளருவன்.
  ஆட்சி மொழி - ஆங்கிலம், நெளருவன்.
  சமயம் - கிறிஸ்தவம்
  சுதந்திர தினம் - 31.1.1968.

  நெளரு மத்திய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மிகச்சிறியத் தீவு நாடாகும். இருபது கிலோ மீட்டர் மட்டுமே நீளம் கொண்ட இந்நாட்டின் தென்மேற்கே 2000 கிலோ மீட்டர் தொலைவில் ஆஸ்திரேலியாவும், கிழக்கில் 30 கிலோ மீட்டர் தொலைவில் கிரிபாதியும் அமைந்துள்ளது. 

  நில எல்லைகள் ஏதுமில்லாத நெளரு முதல் உலகப் போருக்குப் பின் பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கூட்டாட்சியின் கீழ் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பின்னர் சுதந்திரம் பெற்றது. 

  பீடபூமி பிரதேசமாகத் திகழும் நாட்டின் முக்கால்வாசி நிலத்தில் உயர்ரக பாஸ்பேட் கனிமம் கிடைக்கிறது. வேறு கனிமங்கள் இல்லை.

  தேங்காய், பழங்கள், காய்கறிகள் விளைபொருட்களாகும்.
  மீன்பிடித்தல் தவிர சுரங்கம் தோண்டுதல், தேங்காய் உற்பத்தி முதலிய தொழில்களும் உள்ளன. 

  5. ஃபிஜி
  REPUBLIC OF FIJI

  தலைநகரம் - சுவா
  பரப்பளவு - 18,270 ச.கி.மீ.
  நாணயம் -  பிஜியன் டாலர் 
  பேசும் மொழி - ஆங்கிலம், இந்தி 
  ஆட்சி மொழி-ஆங்கிலம்
  சமயம் - கிறிஸ்தவம், இந்து, இஸ்லாம்
  சுதந்திர தினம் - 10.10.1970

  தென் மத்திய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள 322 தீவுக்கூட்டங்களின் தொகுப்பே ஃபிஜி என்றழைக்கப்படுகிறது.  இதில் விதிலெவு, வனுவா லெவு, விட்டில்வு தீவு ஆகியவைகள் முக்கியமானவையாகும்.  மொத்த தீவுக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை. பெரும்பாலும் மலைகளும், வெப்ப மண்டலக் காடுகளும் நிறைந்துள்ள இந்நாட்டில் கோடை காலத்தில் வெப்பம் மிகுதியாக இருக்கும்.

  நில எல்லைகள் ஏதுமற்ற ஃபிஜியின் தெற்கே 1750 கிலோ மீட்டர் தொலைவில் நியூசிலாந்து உள்ளது.  1874 - இல் தொடங்கி சுதந்திரம் பெறும் வரை பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 

  இந்தியர்களின் வம்சாவளியினர் ஆட்சியில் பங்கு பெறுவதைத் தடுக்க 1987 - இல் சிரிவேணி ரபூகா தலைமையில் இராணுவப் புரட்சி ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர்.  1997- இல் புதிய அரசியல் சட்டம் இயற்றப்பட்ட பின் 1999 - இல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகேந்திர செளத்ரி பிரதமராக பதவி வகித்தார்.  2000 - இல் நடைபெற்ற சதியால் அவர் பதவியிழக்க வைக்கப்பட்டார். 

  தங்கம், வெள்ளி ஆகிய கனிமங்கள் மட்டுமே உள்ளன. எண்ணெய் வளங்கள்  தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 

  கரும்பு, நெல், தேங்காய், வாழை, மிளகு, இஞ்சி முதலியவைகள் விளைபொருட்களாகும்.  மீன்பிடித்தல், விவசாயம் தவிர தேங்காய் கொப்பரை, ஜவுளி, சர்க்கரை உற்பத்தி, சுரங்கம் தோண்டுதல் முதலிய தொழில்களும் உள்ளன. அடர்ந்த காடுகளிலிருந்து மரங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.  சுற்றுலா நாட்டின் முக்கிய வருவாய் மூலமாக உள்ளது. 

  6. டோங்கா
  KINGDOM OF TONGA

  தலைநகரம் - நுகுலோஃபா
  பரப்பளவு - 748 ச.கி.மீ.
  நாணயம் -  பா அங்கா 
  பேசும் மொழி - ஆங்கிலம், டோங்கன் 
  ஆட்சி மொழி - ஆங்கிலம்,டோங்கன்
  சமயம் - கிறிஸ்தவம்
  சுதந்திர தினம் - 4.6.1970

  தென் மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள 170 தீவுக்கூட்டங்களின் தொகுதியே டோங்கா என்றழைக்கப்படுகிறது.  டோங்கா என்பதற்கு "நட்புத் தீவுகள்' என்று பொருள்.  மொத்த தீவுக் கூட்டங்களில் 45 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். 

  எரிமலைகளும், பவளப் பாறைகளும் நிறைந்து காணப்படும் இந்நாட்டிற்கு நில எல்லைகள் கிடையாது.  இதன் மேற்கில் 600 கிலோ மீட்டர் தொலைவில் ஃபிஜியும், தென் மேற்கில் 3000 கிலோ மீட்டர் தொலைவில் ஆஸ்திரேலியாவும் அமைந்துள்ளது. 

  17- ஆம் நூற்றாண்டில் முதன் முதலில் டச்சுக்காரர்கள் இங்கு வந்து குடியேறினர்.  பின்னர் 1900 - லிருந்து பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்தது. 
  சுண்ணாம்புக் கல், மார்பிள், பாஸ்பேட் முதலிய கனிமங்கள் உள்ளன. 

  நாட்டின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கை தேங்காய், வாழைப்பழம், வனிலா பீன்ஸ் முதலிய விளைபொருட்கள் வகிக்கின்றன. தவிர, இஞ்சி, பருத்தி, சேனைக்கிழங்கு, காப்பி பிரதான விளைபொருட்களாகும்.

  விளைபொருட்களின் ஏற்றுமதியை அடுத்து நாட்டிற்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் துறையாக சுற்றுலா திகழ்கிறது.  மீன்பிடித்தல், உணவு பதப்படுத்துதல், சுரங்கம் தோண்டுதல், தென்னை பொருட்கள் தயாரித்தல் முதலிய தொழில்களும் உள்ளன. அந்நிய நாடுகளில் வசிக்கும் டோங்கா நாட்டு மக்கள் தாய் நாட்டிற்கு அனுப்பும் பணவரி மூலம் வரும் வருவாய் நாட்டின் பொருளாதார மூலமாகத் திகழ்கிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai