கடி

""எதுக்குண்ணா மோட்டார் சைக்கிள்லே எட்டு போட்டுக்கிட்டு  இருக்கே?''""பைக்கிலே எட்டு போட்டாத்தான் லைசென்ஸ் குடுப்பாங்களாம்!''
கடி

""எதுக்குண்ணா மோட்டார் சைக்கிள்லே எட்டு போட்டுக்கிட்டு  இருக்கே?''
""பைக்கிலே எட்டு போட்டாத்தான் லைசென்ஸ் குடுப்பாங்களாம்!''

ரூபன், ராஜரீகம்,
சங்கரன்கோவில் - 627756


""பத்தாயிரத்துக்கு எத்தனை சைபர்?...''
""சரியாப் போட்டா நாலு  சைபர்னு நெனைக்கிறேன்!....... சரியாப் போடலேன்னா நீங்க ஒரு சைபர் போடுவீங்க!''

பர்வதவர்த்தினி, சென்னை.


 ""எதுக்கு பையனுக்கு "பெளதிகம்' னு பேர் வெச்சிருக்கீங்க?''
""பிற்காலத்திலே என்னை "பெளதிகத்தின் தந்தை' ன்னு கூப்பிடுவாங்கல்லே!...''

அலிமா பீவி, 
கடைய நல்லூர் -627751.


""இந்த பஸ் பாயின்ட் டு பாயின்ட்!.... வழியிலே எங்கேயும் நிக்காது!''
""பிரேக் பிடிச்சாக்கூடவா?''

ஆர்.எம்.வடுகநாதன்,
வேதாரண்யம்.


""அறிவு இருக்காடா?''
""தெரியலேடா!''
""என்னடா!... உனக்கு அறிவு இருக்கான்னு உனக்கே தெரியலேன்னு  சொல்றியே?''
""நான் உனக்குத்தான் கேட்கிறேன்னு நினைச்சுக்கிட்டேன்டா!''


மு.பெரியசாமி,
விட்டுக்கட்டி.

""கடல் வாணிகம்னா என்னடா?..... உனக்குத் தெரியுமா?''
""பீச்சுலே சுண்டல், பலூன்லாம் விக்கறாங்களே அதுவாயிருக்கும்!''

ஏ.நாகராஜன், பம்மல்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com