நினைவுச் சுடர்!: யசோதையின்  திகைப்பு! 

யசோதா ஒரு மிகப் பெரிய பானையில் மத்தைப் போட்டுத் தயிரைக் கடைந்து கொண்டிருந்தாள்.  உர்ர்...உர்ர்... என்று சத்தம் வந்தது! கிருஷ்ணனுக்கு நாக்கில் ஜலம் ஊற ஆரம்பித்து விட்டது. அம்மாவிடம் வந்தான்!
நினைவுச் சுடர்!: யசோதையின்  திகைப்பு! 

யசோதா ஒரு மிகப் பெரிய பானையில் மத்தைப் போட்டுத் தயிரைக் கடைந்து கொண்டிருந்தாள்.  உர்ர்...உர்ர்... என்று சத்தம் வந்தது! கிருஷ்ணனுக்கு நாக்கில் ஜலம் ஊற ஆரம்பித்து விட்டது. அம்மாவிடம் வந்தான்!

""அம்மா!.... இது என்ன ஓசை?'' என்று கேட்டான் ஒன்றும் தெரியாததைப் போல! 
யசோதை, ""பானைக்குள்ளே பூதம் இருக்கு கண்ணா!.... உன்னைப் பிடிச்சுக்கும்!.... வெளியிலே ஓடிப் போய்விடு!'' என்றாள்.

""அம்மா!.... பொய் சொல்றியே,... இதுக்குள்ளே நிஜமாவே பூதம் இருக்கா?''

""நிஜம்மாத்தாண்டா கண்ணா!.... போய்விடு!.... அது உன்னைப் பிடிச்சுக்கும்!'' 
""பூதம் உன்னைப் பிடிக்காதா?''

""நான் பெரியவள்!.... என்னைப் பிடிக்காது!.... நீ சின்னக் குழந்தையில்லையா?.... 
உன்னைப் பிடித்துக் கொள்ளும்!'

""ம்ஹூம்!.... நான் நம்ப மாட்டேன்!... நீ சொல்வது நன்றாயிருக்கா?.... என்னை வெளியே போகச் சொல்றியே!.... அந்த பூதம் உன்னைப் பிடித்துக்கொண்டால் என்ன செய்வது?.... அம்மாவைக் காக்க முடியாதவன்னு என்னைச் சொல்வாங்களே!'' 

 ""குழந்தாய்!.... என்னை என்னடா செய்யச் சொல்றே?''

""இதை முதலிலேயே கேட்டிருக்கலாமில்லே?...''

""இப்போதான் சொல்லேன்!... உன் யோசனையை!''

""அம்மா உன் இரண்டு கைகளையும் பானைக்குள் விடு!.... அந்த பூதமாகிய வெண்ணெயை எடுத்து என்னிடம் கொடுத்தால் நான் அதை விழுங்கி விடுகிறேன்!...'' என்றான் கிருஷ்ணன்!

யசோதை திகைத்து நின்றாள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com