அங்கிள் ஆன்டெனா

பாலூட்டி உயிரினங்களில் மிகவும் புத்திசாலித்தானமான விலங்குகளில் யானையும் ஒன்று.
அங்கிள் ஆன்டெனா

கேள்வி:
யானைக்கு ஞாபக சக்தி அதிகம் என்கிறார்களே, அது உண்மையா?
பதில்: பாலூட்டி உயிரினங்களில் மிகவும் புத்திசாலித்தானமான விலங்குகளில் யானையும் ஒன்று. . யானை மிகப் பெரிய அளவில் இருந்தாலும், அதன் உருவம் பயத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அதிகமான மக்கள் யானையை நேசிக்கிறார்கள். அதைப் பார்த்தாலே மகிழ்ச்சி கொள்கிறார்கள். அருகில் போய் தொட்டுப் பார்க்கத் துடிக்கிறார்கள். மற்ற காட்டு விலங்குகள் மேல் இவ்வளவு பாசம் யாருக்கும் வருவது இல்லை என்பது உண்மை.
யானை எதையும் தனது கடைசிக் காலம் வரை மறக்காது என்று பலர் சொல்வார்கள். இது முற்றிலும் உண்மை இல்லை. இருந்தாலும் யானையின் ஞாபக சக்தி அபாரம்தான்.
யானையின் மூளையும் மிகவும் பெரியதுதான். ஆனால் அதன் உடலின் எடையை ஒப்பிடுகையில் மிகவும் சிறியதுதான். உடலின் அளவுக்கேற்றபடி பார்த்தால் மனித மூளைதான் அளவில் மிகப் பெரியது. மனித மூளையின் ஞாபகசக்தியின் (EQ power) அளவு 7.44. டால்பின்களின் அளவு 5.31. யானையின் அளவு 1.87தான். இருந்தாலும் யானைகள் பலவற்றை சிலகாலம் வரை ஞாபகம் வைத்துக் கொள்ளும் திறன் பெற்றவைதான். யானையைப் பற்றி இன்னும் பல சுவாரசியமான தகவல்கள் இருக்கின்றன. இங்கே இடம் இல்லாததால் சொல்ல இயலவில்லை. பின்னொரு சமயம் அவற்றை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். 
- ரொசிட்டா
அடுத்த வாரக் கேள்வி
புறாக்களை வளர்ப்பவர்கள் அதை வானில் பறக்க விடுகிறார்கள். சிறிது நேரம் கழித்து அவை மீண்டும் அவர்களிடத்தே வந்து விடுகின்றன. புறாக்கள் என்ன 
அவ்வளவு புத்திசாலிப் பறவைகளா?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் 
நல்ல பதில் கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com