கடி

கடி

""அறுவடைன்னா என்னடா?''
""இது தெரியாதா?.... கேட்டுக்கோ!.... 
மசால் வடை, தயிர் வடை, சாம்பார் வடை, 
கீரை வடை, மெது வடை, பருப்பு வடை!.... 
அவ்வளவுதான்!''
என்.பர்வதவர்த்தினி, சென்னை - 600075.

✶ ""ஒரு வாழைப்பழம் 3 ரூபா!.... அப்பன்னா 9 வாழைப்பழம் எவ்வளவு ரூபா?''
""3  9 ரூபா சார்!''
ம.அக்ஷயா, த/பெ மு.மதிவாணன், துணை சுகாதார நிலையம், அச்சல்வாடி, 
அரூர் - 636903.

""ரகு,  நாயைப் பத்திக் கட்டுரை எழுதச் சொன்னா ரவி எழுதினா மாதிரியே 
எழுதியிருக்கியே!....'' 
""ரெண்டு  பேரும் ஒரே நாயைப் பத்தித்தான் சார் எழுதினோம்!'' 
உ.அமீரா அலிமா, கடையநல்லூர்.

✶ ""சென்டி மீட்டரை, மீட்டரா மாத்த 
என்ன செய்யணும்?''
""சென்டியை அடிக்கணும் சார்!''
எஸ்.சடையப்பன், அங்கு விலாஸ் 
மேல் நிலைப்பள்ளி, கலெக்ட்ரேட், 
திண்டுக்கல் - 624004.


""புதுசா புல்லாங்குழல் வாங்கிட்டு வரச் சொன்னேனே, ஏண்டா வெறுங்கையோட வர்றே?''
""எல்லா கடையிலேயும் அதிலே ஓட்டை போட்டு வெச்சிருக்காங்களே!''
கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

""கிரிக்கெட்லே ரெண்டு கையையும் 
தூக்கினா சிக்ஸர்!..... ஒரு கையை மட்டும் 
தூக்கினா?''
""எனக்கா தெரியாது!..... ஆறுலே பாதி 
மூணு ரன்!''
வி.ரேவதி, தஞ்சாவூர் - 613007.


வாரம் 2 டி-சர்ட் பரிசு  நட்சத்திரக்  குறியிட்ட   2 கடிகளும்  பட்டுக்கோட்டை  ரூபி  ரெடிமேட்ஸ்  வழங்கும் தலா ஒரு  டி-சர்ட்டைப் பெறுகின்றன.  பரிசு  பெற்றவர்களுக்கு  வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com