கடி

""புத்தகத்திலே நாலாவது பக்கத்தைக் காணோண்டா!''""நாலா பக்கமும் தேடிப்பார் கிடைக்கும்!''
கடி


""புத்தகத்திலே நாலாவது பக்கத்தைக் காணோண்டா!''
""நாலா பக்கமும் தேடிப்பார் கிடைக்கும்!''

ஏ.நாகராஜன், சென்னை - 600075.

""எங்க எதிர் வீட்டு அலமேலு ஆண்டி ரொம்ப ஃபேமஸ்!,.... சூப்பரா பாடுவாங்க,.... பத்து வருஷமா பாடிக்கிட்டு இருக்காங்க! ""அவ்ளோ பெரிய பாட்டா?''

நா.வினோத்குமார், 
பாராஞ்சி, அரக்கோணம் - 632510.

""அந்த ஜோசியர் ரொம்ப நவீனமானவர்!''
""எப்படிச் சொல்றே?''
""செயற்கைக் கோளை எல்லாம் வெச்சுப் பலன் சொல்லுவாருன்னா பாத்துக்கோயேன்!''

பொ.பாலாஜி, அண்ணாமலைநகர் - 608002.

""இந்த பஸ் டீ டிபன் சாப்பிடறதுக்கு, டீ குடிக்கிறதுக்கு,  இங்கே பத்து நிமிஷம் நிக்கும்!.... எல்லோரும் இறங்கிக்குங்க!''
""அப்பா!,.... பஸ்ùஸல்லாங்கூட டிபன் சாப்பிட்டு டீயெல்லாம் குடிக்குமாப்பா!''

டி.மோகன்தாஸ், 95 ஏ, காமராஜபுரம், 
நாகர்கோயில்.

""எங்க தாத்தாவுக்கு கத்தி பேசினாத்தான் காது கேக்கும்!''
""ஆச்சரியமா இருக்கே!.... உங்க வீட்டிலே "கத்தி' யெல்லாம் பேசுமா என்ன?''

ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்.


""எங்க அங்கிள் ஐஸ்க்ரீம் வியாபாரம் ஆரம்பிச்சாரு!.... நல்லா சூடு பிடிச்சுக்கிச்சு!''
""ஐஸ்க்ரீம் உருகிடாதா!''

கே.நேசினி, பொள்ளாச்சி - 642004.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com