சுடச்சுட

  
  sm12

  கேள்வி: ஆமைகளுக்கு அவற்றின் ஓடுகள் பாதுகாப்பு என்பார்கள். இப்படிப்பட்ட ஓடு இல்லாத ஆமைகூட இருக்கிறதாமே? உண்மையா?

  பதில்: ஆமைகளுக்கு அவற்றின் மேல் தோடு (ஓடு) கேடயம் போலப் பாதுகாப்பு அளிக்கிறது. இந்த ஓடு இல்லாத ஆமைகளுக்கு இந்த வசதி கிடையாது. இப்படிப்பட்ட ஆமைகளைத் தோல் முதுகு ஆமைகள் என்று அழைக்கிறார்கள்.

  ஓடு இல்லாததால் இதன் தலை வழக்கத்தைவிட சற்றே பெரியதாக அமைந்திருக்கின்றது.  நீண்ட கழுத்தும் இருக்கும். நீருக்குள் இருக்கும்போது இந்த ஆமைக்கு தைரியமும் துணிச்சலும் அதிகம். பல்வேறு நீச்சல் யுக்திகளைப் பயன்படுத்தி எதிரிகளிடமிருந்து தப்பித்து விடும்.

  முட்டையிடும் தருணங்களில்தான் இதற்கு ஆபத்து அதிகம். எப்படியும் கடற்கரைக்கு வந்தாக வேண்டும். ஆகவே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடற்கரைக்கு வரும்போது, கடற்கரை மணலைத் தனது முதுகில் வாரித் தூவிக்கொண்டு அடையாளம் தெரியாமல். கடற்கரையிலும் வெகுதூரம் பயணிக்காமல் மிக அருகிலேயே முட்டைகளை இட்டுவிட்டு, சட்டென்று கடலுக்குத் திரும்பி விடும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai