சுடச்சுட

  

  கூர்பனி வாடை 
  குளிர் நமை வருத்தும்!
  மார்கழி ஓடி 
  மறையத் "தை' பிறக்கும்!

  தேறிடலாகா 
  தெனும் பொருள் முழுக்கும்
  நீறிடும் போகி
  நெருப்பினில் கொளுத்தும்!

  மாரியும் தூவி 
  மணிக்கதிர் விளைக்கும்!
  பாரினில் மேவும் 
  பசிப்பிணி ஒழிக்கும்!

  காரிருள் வானும் 
  கதவினைத் திறக்கும்!
  சூரியன் தானும் 
  சுடரொளி பரப்பும்!

  தோரணம் வாசல் 
  தொங்கலில் அழைக்கும்!
  பூரண வாசம் 
  பொங்கலில் குழைக்கும்!

  தேர்த்திரு  நாளாய் 
  தெருக்களை நிரப்பும்!
  ஏர்த்திருநாளை
  இதயத்தில் நிறுத்தும்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai