சுடச்சுட

  
  sm7

  ""ஜாக்கி சான் கிட்டே  நாற்காலியிலே உட்காருங்கன்னு சொன்னா அவரு 
  கண்டிப்பா உட்காரமாட்டார்!''
  "" ஏன்?''
  ""அவருக்குத் தமிழ் தெரியாதே!...''

  ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன் கோட்டை

   

  ""சாப்டா இருக்கா மாதிரி ஒரு பன் குடுங்க!''
  ""சாப்டா எப்படி இருக்கும்? சாப்பிடாம இருந்தாத்தான் இருக்கும்!''
  ஆர்.சண்முகராஜ், 53/3 , கிராமத் தெரு, 

  திருவொற்றியூர், சென்னை - 600019.

   

  ""மீன் சாப்பிடும்போது ஏண்டா செருப்பு போட்டுக்கறே?''
  ""முள்ளு குத்தும்னு சொன்னாங்களே!''

  கே.ஆர்.உதயகுமார், சென்னை.

   

  ""காலண்டர்லே எனக்கு சிவப்பு நம்பர் போட்ட தேதிகள்தான் ரொம்பப் பிடிக்கும்!''
  ""ஏண்டா?''
  ""அதெல்லாம் லீவு நாட்களாச்சே!...''

  ம.நிவேதா, சிக்கல்.  ""என்னோட அதிர்ஷம்!....அம்மா எனக்கு ரெண்டு அதிர்ஷம் தந்தாங்க!...''
  ""அதிர்ஷம் இல்லேடா!.... அதிர்ஷ்டம்னு சொல்லு!''
  ""இல்லே!.... ரெண்டு அதிர்ஷம்தான் தந்தாங்க!....''

  ஏ.நாகராஜன், 5, வீரராகவன் தெரு, சென்னை - 600075.

   

  ""கையிலே அடிபட்டுச்சுன்னு கட்டு போட்டேனே,....இப்போ எப்படி இருக்கு!''
  ""அவிழாம அப்படியேதான் இருக்கு!''

  ஆ.சுகந்தன், காரிமங்கலம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai