சுடச்சுட

  

  மு.வரதராசனாரின் பொன்மொழிகள்!

  By ஏ.கே.நாசர், டி.ஆர்.பட்டினம்.  |   Published on : 12th January 2019 01:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sm2

  மனத்தைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல் எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்.

  உடல் மெலிந்து இருக்கலாம்,....ஆனால் உள்ளம் மெலிந்து இருக்கக் கூடாது.
  உடம்பில் அழுக்கு ஏற்படுகிறது....

  குளிக்கிறோம்...சுத்தமாகிவிடுகிறது!.....உள்ளமும் அப்படித்தான்!.... தூய எண்ணங்களில் அடிக்கடி குளித்துக் கொண்டிருக்க வேண்டும்.

  உலகத்துக்கே பொதுவான பெரிய குறைகள் இரண்டு உள்ளன. மூட நம்பிக்கை ஒன்று! ஆடம்பரம் மற்றொன்று.

  பிறர் உரிமையைபக் பறிப்பது எவ்வாறு குற்றமோ அவ்வாறே நம் உரிமை பறிபோவதைப் பார்த்துக் கொண்டு வாளா இருப்பது பெருங்குற்றம்.

  மனிதனுக்கு உரிமை, உணர்ச்சி என்பது பிறவியிலேயே அமைந்துவிடுகிறது. ஆனால் கட்டுப்பாடு என்பது பயிற்சியில்தான் அமைகிறது.

  பிறருக்காக நம் நெஞ்சம் உருகும்போதுதான அது நிஜமாக வளர்கிறது.

  உடல் நோயற்று இருப்பது முதல் இன்பம். மனம் கவலையற்று இருப்பது இரண்டாம் இன்பம். பிறருக்கு உதவியாக இருப்பது மூன்றாவது இன்பம்.
  அன்பு மனத்தை தெய்வ மனம் என்றும், ஆணவ மனத்தை விலங்கு மனம் என்றும் பிரிக்கலாம். நாம் எப்போதும் தெய்வ மனம் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும்.

  நல்ல மனங்கள் பெருகினால் வறுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai