சுடச்சுட

  
  sm3

  ஒரு யானைக்கும் வாலில்லாக் குரங்குக்கும் தங்களுள் யார் பெரியவர் என்று போட்டி எழுந்தது. அவை இரண்டும் ஓக் ஆந்தையிடம் சென்றன. தங்களில் யார் சிறந்தவர் என்று கேட்டன. 

  அதற்கு ஆந்தை, ""நான் ஒரு போட்டி வைப்பேன்!..... அந்தப் போட்டியில் யார் ஜெயிக்கிறீர்களோ அவர்தான்  பெரியவர்!...''

  என்றது.

  ""என்ன போட்டி?...கொஞ்சம் விவரமாய்ச் சொல்லேன்!...'' என்றது குரங்கு.

  ""இதோ எதிரிலுள்ள ஆற்றைக் கடந்து எதிர்க்கரையிலுள்ள மாமரத்திலிருந்து மாம்பழம் பறித்து வர வேண்டும்....''

  யானையும், குரங்கும் ஆற்றைப் பார்த்தன. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. யானையால் கடந்து விட முடியும்!...ஆனால் குரங்கால் முடியாது!.... இருப்பினும் யானை குரங்கைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டது. அழகாக ஆற்றைக் கடந்து விட்டது.  இரண்டும் மாமரத்தை அடைந்தன. மாம்பழங்களோ மிகவும் உச்சியில் மட்டுமே இருந்தன. யானையால் மரம் ஏற முடியுமா?....பெருமூச்சு விட்டது. ""கவலைப் படாதே நண்பா!...'' என்ற குரங்கு விறுவிறுவென்று மரத்தின் மீது ஏறியது. பழங்களைப் பறித்துக் கொண்டு வந்துவிட்டது. சில பழங்களை யானையிடம் கொடுத்தது. தானும் கொஞ்சம் வைத்துக் கொண்டது. முன்போலவே யானை குரங்கைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டது. இரண்டும் கம்பீரமாக ஆந்தை இருக்கும் கரையை நோக்கி வந்தது! இரண்டும் ஆந்தையிடம் பழங்களைக் கொடுத்தன.

  ஆந்தை இந்த ஒற்றுமை நிறைந்த விலங்குகளை மகிழ்ச்சியோடு பார்த்தது.  

  ""நீங்கள் இருவருமே சிறந்தவர்கள்தான்!... ஒருவர்க்கு ஒருவர் ஒத்துழைத்துப் பழங்களைப் பறித்து வந்துவிட்டீர்கள்!....சபாஷ்!....'' என்றது.

  யானையும் குரங்கும் காட்டிற்குள் பழங்களைச் சாப்பிட்டவாறே சந்தோஷத்துடன் நடந்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai