சுடச்சுட

  


  1. கோணலாக இருந்தாலும் குறையாத ருசிக்குச் சொந் தக்காரன்... 
  2. மொட்டைப் பாறையில்  மூடிய கண்கள் மூன்று....
  3. மூடி வைத்த பானைக்குள் முத்தான முத்துக்கள்...
  4. வெட்டியவனுக்கே விருந்து கொடுப்பான்... இவன் யார்?
  5. தினமும் பிறப்பான்... தினமும் இறப்பான்... இவன் யார்?
  6. கசப்பான குணவதி.... கைதேர்ந்த மருத்துவக்காரி...
  7. மஞ்சள் மாவிளக்காய் மரத்திலே பூத்திருப்பாள்... 
  8. குட்டையிலே பிறந்து, குடிசையிலே வளர்ந்து, 
  சந்தைக்குப் போய்,  பந்தியிலே படுப்பான்... இவன் யார்?
  9. மணமில்லாத பூ,  மனதை மகிழ்விக்கும் பூ... இது என்ன?

  விடைகள்:

  1. கரும்பு, 2. தேங்காய், 3. மாதுளம்பழம், 4. இளநீர், 5. நாள்காட்டி (காலண்டர்)
  6. வேப்பம்பூ, 7. பூவரசம்பூ, 8. கோரைப்பாய் 9. மத்தாப்பூ

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai