அங்கிள் ஆன்டெனா

வானவில் - பேருக்கு ஏற்றாற்போல வில் போல வளைந்து காணப்படுவது ஏன்?
அங்கிள் ஆன்டெனா


கேள்வி: வானவில் - பேருக்கு ஏற்றாற்போல வில் போல வளைந்து காணப்படுவது ஏன்?

பதில்:   வானவில் எப்படி உண்டாகிறது? சூரியனின் ஒளிக்கதிர்கள் மழைத்துளிகளின் மேல் படும்போது நிறப்பிரிகை ஏற்பட்டு வண்ணவண்ணமாக வானவில் தோன்றுகிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரியும்.

சூரியனால் இது ஏற்படுவதால் சூரியனின் வடிவமான வட்டத்தை இது பிரதிபலிக்கிறது. அதனால்தான் வானவில் அரைவட்டமாக வளைந்து காணப்படுகிறது.

அதெல்லாம் சரிதான், நீங்கள் சொல்வது போல சூரியனின் வட்ட வடிவத்தைப் பிரதிபலிக்கிறது என்றால் வானவில் ஏன் அரைவட்டமாக இருக்கிறது? முழு வட்டமாகத்தானே தோன்ற வேண்டும் என்று கேட்கிறீர்களா? நீங்கள் யோசிப்பது சரிதான். ஆனால்...

நாம் பூமியில் இருப்பதால் சூரியனின் வடிவம் பாதியாக மறைக்கப்படுகிறது. இதனால்தான் வானவில் அரைவட்டமாக நமக்குத் தோன்றுகிறது. வானவில் முழு வட்டமாகத்தான் இருக்கும், இருக்கிறது.

இந்த முழு வட்ட வானவில்லைக் காண வேண்டும் என்றால் நீங்கள் வானில் இருக்க வேண்டும். விமானத்தில் பறக்கும்போது  வானவில் தோன்றி இந்த முழு வட்ட வானவில்லை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com