சுடச்சுட

  
  sm15

   

  கேள்வி: ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எடை இருக்கிறது. பூமியிலுள்ள மனிதர்கள் அனைவரையும் சேர்த்து எடை போட்டால் எவ்வளவு கிலோ தேறுவார்கள்....?

  பதில்:   தற்போது உலகின் மக்கள் தொகை 7.7 பில்லியன் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு பில்லியன் என்பது 100 கோடிகளுக்குச் சமம் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

  இத்தனை பேரையும் எடை போடுவது என்பது மிகவும் கஷ்டம். ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு எடை இருப்பார்கள்.

  இருந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் உள்ள ஓர் ஆராய்ச்சி நிறுவனம் தோராயமாக ஒரு கணக்கு போட்டுச் சொன்னது. அதில் எடை குறைந்தவர்களும் எடை அதிகமாக உள்ளவர்களும் அடக்கம். அந்தக் கணக்கின்படி...

  பூமியிலுள்ள மொத்த மனிதர்களின் மொத்த எடை 316 மில்லியன் டன். ஒரு மில்லியன் என்பது 10 லட்சங்களுக்குச் சமம். ஒரு டன் என்பது ஏறக்குறைய 907 கிலோ ஆகும். அப்படியானால் பூமியிலுள்ள மக்களின் மொத்த எடை எவ்வளவு கிலோ என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai