சுடச்சுட

  
  sm11

   


  ""இன்னிக்கு  ஆப்பம், ஆப்பமா எட்டு ஆப்பம் சாப்பிட்டேன்!''
  ""ம்ம்ம்.... அப்புறம்?''
  ""ஏப்பம், ஏப்பமா எட்டு ஏப்பம் விட்டேன்!''

  தீ.அசோகன், சென்னை.


  ""அப்பா!.... எக்ஸிபிஷன்லே என்னைக் காணோம்!''
  ""என்னடா உளர்றே?''
  ""அதோ அந்த போர்டுலே "எக்ஸிபிஷன்' னு இங்கிலீஷ்லே எழுதியிருக்கில்லே... அதுலே ‘ச’ ஐ காணோம்ப்பா''

  உ.அப்துல் ஹாதி, கடைய நல்லூர்.


   ""பிராக்டிகலுக்கும், தியரிக்கும் என்ன வித்தியாசம்?''
  ""பிராக்டிகல்னா நாங்க அறுப்போம்!.... தியரின்னா நீங்க அறுப்பீங்க!...''

  ஆ.சுகந்தன், காரிமங்கலம் - 635202

   

  ""ராமு, ..."நான் முதலமைச்சர் ஆனால்!...' என்கிற தலைப்பிலே கட்டுரை 
  எழுதச் சொன்னேனே.... ஏன் எழுதலை?''
  ""நான் "பிரதமர்' ஆகணும்னு ஆசைப்படறேன் சார்!... 
  அதனாலேதான் எழுதலே!''

  கே.சித்ராங்கன், காஞ்சிபுரம் - 631501.


  ""நான் அந்த அழகு நிலையத்துக்குப் போய் அழகு பண்ணிக்கப் போறேன்!''
  ""பெஸ்ட் ஆஃப் "லுக்'...!''

  பி.எஸ்.சண்முகசுந்தரம், சங்கரன்கோவில்

   

  "" எலிக்குப் பிடிக்காத படிப்பு எது?''
  ""..."பொறி' இயல்!''

  விஜயா, சென்னை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai