காக்கா காக்கா ஓடி வா!
By நா.இராதாகிருட்டிணன் | Published On : 13th July 2019 02:04 PM | Last Updated : 13th July 2019 02:04 PM | அ+அ அ- |

காக்கா காக்கா ஓடி வா!
காவிரி நீரைக் கொண்டு வா!
காலிக் குடங்கள் நிரப்ப வா!
கண்ணீர்த் துளிகள் துடைக்க வா!
குளங்கள் தோறும் சென்று வா!
குடிக்க நீரைக் கொண்டு வா!
தளர்ச்சி இன்றிப் பறந்து வா!
தண்ணீர்ப் பஞ்சம் போக்க வா!
கருத்த மேகம் அழைத்து வா!
கனத்த மழையைக் கொண்டு வா!
வருத்தமெல்லாம் தீர்க்க வா!
வறண்ட பூமி செழிக்க வா!
புதிய திட்டம் கொண்டு வா!
புவியின் வெப்பம் தணிக்க வா!
நதிகளை ஒன்றாய் இணைக்க வா!
நாட்டின் நீர்வளம் பெருக்க வா!
நெல்வயல், மரம், செடி காக்க வா!
நன் மரக் காடுகள் காத்திட வா!
நலமுடன் வாழ்வு அமைந்திடவே
நல்ல செய்தி கொண்டு வா!
மனங்கள் குளிர்ந்திட வா! வா! வா!
மழையைச் சீக்கிரம் கொண்டு வா!
கங்கையோடு காவிரி நீர்
கலந்து கைகள் குலுக்கிட வா!