அகில்குட்டியின் டைரி!: ஏமாற்றம்!

​ரெண்டு நாளைக்கு முன்னாலே அப்பாவோட பிரெண்ட் வரது மாமா வந்திருந்தார். (அவரு பேரு வரதராஜன்...
அகில்குட்டியின் டைரி!: ஏமாற்றம்!


ரெண்டு நாளைக்கு முன்னாலே அப்பாவோட பிரெண்ட் வரது மாமா வந்திருந்தார். (அவரு பேரு வரதராஜன்... நாங்க அவரை அப்படித்தான் கூப்பிடுவோம்!) அப்போ நாங்க ஸ்கூலுக்குக் கிளம்பிக்கிட்டு இருந்தோம்! அவர் எப்பவும் வெறுங்கையோடு வரமாட்டார். எங்களுக்கு ஏதாவது தின்பண்டங்களோ விளையாட்டுச் சாமன்களோ வாங்கிக்கொண்டு வருவார். அவர் வந்தால் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்! அப்பாவை, "டேய் , .... வாடா,.,...போடா'' ன்னுதான் பேசுவார். அம்மாவுக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும்! ரொம்ப சகஜமாப் பழகறவர்ன்னு சொல்லுவாங்க!. அவர் வந்தபோது எங்களுக்கு, ஒரு பெரிய பாட்டிலில், முந்திரி, திராûக்ஷ, பாதாம் பருப்பு, அக்ரூட் பருப்பு, பேரீச்சம்பழம், ட்ரை புரூட்ஸ், தேன் எல்லாம் கலந்த கலவையைக் கொண்டு வந்தார். எனக்கு அதைச் சாப்பிட ரொம்ப ஆசையா இருந்தது! பெரிசா ரெண்டு சாக்லேட் வேறே! எனக்கும் ரகுவுக்கும் கொடுத்தார்! நாங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்குக் கிளம்பினதாலே அதை அம்மாகிட்டே கொடுத்துட்டோம்! மாமாவுக்கு டாடா சொல்லிட்டு ஸ்கூலுக்குக் கிளம்பிட்டோம்!

ஆனா சுவையான அந்த சாக்லேட் நினைவாகவே இருந்தது எனக்கு! ட்ரை ஃப்ரூட்ûஸ இன்னிக்கு சாயங்காலம் சாப்பிடணும்னு நெனைச்சுக்கிட்டேன்! எப்படா சாயங்காலம் வரும்னு தோணிச்சு! 

அன்னிக்கு ஸ்கூல்லே டீச்சர், பள்ளி நிறுவனர் நாளை முன்னிட்டு,.... (அதான் ஃபவுண்டர்ஸ் டே!) ஒரு நாடகம் போடப்போறதாகவும், அதிலே நடிக்க ஐந்து பேர் வேணும்னும் கேட்டாங்க... இன்னும் மூணு நாள்தான் இருந்தது! டீச்சர் கையிலே அந்த நாடகத்தின் பிரதியும் இருந்தது. நான், வாணி, கலா, பாரதி, சுபத்ரா எல்லோரும் பேர் கொடுத்துட்டோம்! அன்னைக்கே சாயங்காலம் டீச்சர் கூப்பிட்டு, எங்ககிட்டே நாடகப் பிரதிகளைக் கொடுத்து நடிக்கச் சொல்லித் தந்தார். எங்களுக்கு ரொம்ப ஆர்வமா போயிடுச்சு! மறுபடியும் நாடக ஒத்திகையை எங்க வீட்டிலே வெச்சுக்கலாமான்னு கூட நடிக்கப்போறவங்க கிட்டே கேட்டேன்! எல்லோரும் சரின்னாங்க....எல்லோரும் வீட்டிலே சொல்லிட்டு எங்க வீட்டுக்கு வந்துட்டாங்க! ரகு பக்கத்து வீட்டு மாலாவோட விளையாடப் போயிருந்தான்.

ஒத்திகையை அன்னிக்கே ஆரம்பிச்சுட்டோம்! முதல் நாடக ஒத்திகை சுமார் அரை மணி நேரம் நடந்தது! ரெண்டாவது முறையும் செய்தோம்! வீடே குதூகலமா இருந்தது! வாணி அவ பாத்திரத்திலே வெளுத்து வாங்கினாள்!  பாரதியும்தான்! சுபத்ராவுக்கு ரொம்ப டயர்டா வேர்த்துக் கொட்டியது! 

அம்மா பிரிட்ஜைத் திறந்து சாக்லேட், ட்ரை ஃப்ரூட்ஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்தாங்க....ஒரு ஜக்கில் ஆரஞ்சு ஜூûஸயும் கொண்டு வந்தாங்க.... நான் ரகுவோட சாப்பிட்டுக்கலாம்னு இருந்துட்டேன்! எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பிட்டாங்க!.... ரகு வந்தான்!.... காலை அலம்பிக்கொண்டான்.... அம்மா அவனுக்கும் எனக்கும் பிடி கொழுக்கட்டை தந்தாங்க.... நான் அம்மா கிட்டே, ""எங்கே ட்ரைஃப்ரூட்ஸ்?'' னு கேட்டேன். 

""எல்லாத்தையும் உன் ஃபிரெண்ஸýக்கே கொடுத்துட்டேன்!'' அப்படீன்னாங்க....
""சாக்லேட்?'' அப்படீன்னு கேட்டேன். அதுக்கு அம்மா, ""அதுவும் ஆளுக்குக் கொஞ்சம் உடைச்சுக் கொடுத்துட்டேன்!.... பாவம் உன்  ஃபிரெண்ட்ஸýக்கு அது போதுமோ என்னவோ?'' ன்னு கரிசனமாக் கேட்டாங்க....

எனக்கு ரொம்ப ஏமாற்றமா இருந்தது!... அம்மா மேலே கொஞசம் கோவமாக்கூட இருந்தது.  ""என்னம்மா எங்களுக்குக் கொஞ்சம் வெச்சிருக்கக் கூடாதா?'' ன்னு கேட்டேன். 

""உன் பிரெண்ட்ஸýக்குத்தானே கொடுத்தேன்!'' ன்னாங்க அம்மா.

ஆனா ரகு அதைப் பத்தியெல்லாம் கவலையே படாம கொழுக்கட்டையை சாப்பிட்டுக்கிட்டு இருந்தான். ம்..... என்ன  செய்யறது?.... பசி!.... நானும் அந்தக் கொழுக்கட்டையை சாப்பிட்டேன்! மனசுக்குள்ளே "ச்சே!.... என்ன ஒரு துரதிர்ஷ்டம்!' னு நெனைச்சுக்கிட்டேன்!

ஆனா, பள்ளி  நிறுவனர் நாளை முன்னிட்டு நடந்த நாடகம் அமர்க்களமா இருந்தது! ஒரே கை தட்டல்! நாடகத்திலே நடிச்ச எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருந்தது!  அன்னிக்கு வந்திருந்த பிரமுகர் எங்க எல்லோருக்கும் ஒரு புத்தகமும், ஒரு பதக்கமும்,  கூடவே ஒரு பெரிய பரிசுப் பொட்டலமும் கொடுத்தார்.  நான் புத்தகம், பதக்கம், எல்லாத்தையும் அம்மா, அப்பாகிட்டே காமிச்சேன்! எல்லோரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க!  நான் பரிசுப் பொட்டலத்தை ஆவலோடு பிரித்தேன்! அதில் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில், அன்னைக்கு வரது  மாமா வாங்கி வந்தாரே அதே ட்ரை ஃப்ரூட்ஸ் பாட்டில், அதே பெரிய சாக்லேட் இருந்தது! கடவுளே அனுப்பிச்சா மாதிரி இருந்தது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com