பொன் மொழிகள்

கொடுத்ததை மறந்துவிட்டுப் பெற்றதை ஞாபகம் வைத்துக் கொண்டால் நட்பு மலரும்! 
பொன் மொழிகள்

கொடுத்ததை மறந்துவிட்டுப் பெற்றதை ஞாபகம் வைத்துக் கொண்டால் நட்பு மலரும்! 
- டூமாஸ்


அறிவு இறைவனைத் தேடுகிறது! அன்பு இறைவனின் மடியில் அமர்ந்து கொள்கிறது! 
- முகமது இக்பால்


அறிவில்லாத நேர்மை கொஞ்சம் பலவீனமானதாக இருத்தல் கூடும்!.... ஆனால் நேர்மை இல்லாத அறிவு ஆபத்தானதல்லவா? 
- சாமுவேல் ஜான்சன்


நாம் செய்வதற்கு ஏதாவது வேலை எப்பொதும் இருந்து கொண்டிருந்தால் நம் முன்னேற்றம் தானே நடக்கும்! 
- மில்டன்


பக்கத்து வீட்டுக்காரன் உறவினனைவிட நெருங்கியவன் என்பதை உணர்ந்து கொள்வாய்! 
- யாரோ


கடமையை மறக்காமலிருந்தால் உரிமைகள் தானே நினைவில் இருக்கும்! 
-  இந்திரா காந்தி


நேரத்தைச் சேமித்தால் செல்வமெல்லாம் தானே சேரும்! 
- டிஸ்ரேலி


பூங்காவில் மலர்ச்சி! முகங்களில் புன்னகை! 
- யாரோ


அன்பினால் கோபம் வெல்லப்படுகிறது! நன்மைகளால் தீமை வெல்லப்படுகிறது! 
- புத்தர்


ஒவ்வொரு குடிமகனும் சிந்,திக்கும் திறன் உடையவனாகவும், கல்வியறிவு உடையவனாகவும் திகழ வேண்டும். அதுவே ஜனநாயகம்! 
- டாக்டர் அம்பேத்கார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com