சுடச்சுட

  
  sm11

  கேள்வி: ஈரமே இல்லாத நீர் (Dry Water) இருக்கிறதாமே! உண்மையா?
  பதில்: மிகவும் நல்ல கேள்வி. ஈரமே இல்லாத நீர்கூட இருக்கத்தான் செய்கிறது. இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? 
  ஈரம் இல்லாவிட்டால் அதை எப்படி நீர் என்று அழைப்பது என்ற கேள்வியும் எழத்தான் செய்யும்.
  காய்ந்த நீர் என்பது மிகவும் வித்தியாசமான விந்தையான ஒரு பொருள். இதை தூளாக்கப்பட்ட திரவம் என்று அழைக்கிறார்கள்.
  சிறிய நீர்த்துளிகளைச் சுற்றி சிலிகா என்கிற கோட்டிங் உள்ளது. காய்ந்த நீரிலும் 95 சதவீதம் திரவம்தான் இருக்கும். இந்த சிலிகா கோட்டிங் நீர்த்துளி நீராக உடைந்து பெரிய அளவில் திரவமாக மாறி விடுவதைத் தடுக்கிறது.
  இப்படித் தடுக்கப்பட்டால் நமக்குக் கிடைப்பது உப்புத்தூள்கள் போன்ற நீர்த்துளிகள். இதைத்தான் காய்ந்த நீர் என்கிறார்கள். இதற்கு "காலி நீர்' (Empty Water) என்ற பெயரும் உண்டு.
  -ரொசிட்டா
  அடுத்த வாரக் கேள்வி
  யானைகளுக்கு மட்டும் ஏன் அவ்வளவு நீள தும்பிக்கை? வேறு எந்த விலங்குகளுக்கும் இத்தகைய அமைப்பு இல்லையே?
  பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் 
  நல்ல பதில் கிடைக்கும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai