கடி 

"குழந்தைகளை வேலை வாங்கறது சட்டப்படி குற்றமாப்பா?''"ஆமா!.... எதுக்குக் கேட்கறே?
கடி 

* "எங்கம்மா தாலாட்டுப் பாட 
ஆரம்பிச்சா போதும்!.... உடனே
தங்கச்சிப் பாப்பா தூங்கிடும்!''
"அப்படியா?''
"ஆமாம்!.... இல்லேன்னா அவங்க
திரும்பவும் பாட ஆரம்பிச்சுடுவாங்களே!''
பொ.பாலாஜி, அண்ணாமலை நகர்.

✶ "குழந்தைகளை வேலை வாங்கறது சட்டப்படி குற்றமாப்பா?''
"ஆமா!.... எதுக்குக் கேட்கறே?
"பின்னே ஏம்ப்பா தெனமும்
ஹோம் ஒர்க் குடுக்கறாங்க!''
எம்.சரவணன், வீரணம், சாத்தனூர் போஸ்ட்
தண்டராம்பட்டு - 606706

* "நேத்து ராத்திரி ஒரு மணி வரைக்கும்
படிச்சிக்கிட்டு இருந்தேன்!''
"அப்படியா பரவாயில்லையே....
எப்போ படிக்க ஆரம்பிச்சே''
"செல்போன் எல்லாம் பார்த்துட்டு 12-50க்குத்தான் ஆரம்பிச்சேன்''
கி.செளம்யா, சென்னாவரம்.

* "எங்க பாட்டி பசுஞ்சாணியாலே வரைட்டி தட்டறாங்க!....''
" வரட்டின்னு சொல்லு!''
"இல்லே!.... ஸ்கொயர், டைமண்ட், 
முக்கோணம் ஷேப்பிலே
வரைட்டியாத்தான் தட்டுவாங்க!''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை

✶ "என்னடா இது வீட்டுப்பாடம் எல்லாம் உங்கப்பா கையெழுத்து மாதிரி இருக்கு!''
"ஆமா!.... அப்பாவோட பேனாவிலேதானே எழுதினேன்!''
டி.மோகன்தாஸ்,
95 ஏ, காமராஜபுரம்,
நாகர்கோவில் - 629001.

* எட்டு போடச்சொன்னா பத்து போட்டுட்டேன்!''
"என்னடா சொல்றே?... ஒண்ணுமே புரியலே!''
"ஆர்.டிஓ. ஆபீஸிலே
எட்டு போடும்போது விழுந்துட்டேன்... அதான் பத்து போட்டிருக்கேன்!''
சி.ஆர்.ஹரிஹரன், ஃப்ளாட் 6ஏ, 
ரவி க்ரீன் லீவ்ஸ், ஆலவாய்
வாரம் 2 டி-சர்ட் பரிசு நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com