குழந்தைப் பாட்டு! 

கடிகாரத்தை எடுத்துஇடது கையில் கட்டலாம்;
 குழந்தைப் பாட்டு! 

புரிந்து செயல்படு பொறுமையாய்!
 கடிகாரத்தை எடுத்துஇடது
 கையில் கட்டலாம்;
 காலத்தைநாம் அதனைப்போலக்
 கட்ட முடியுமா?
 
 பிடிவாதத்தால் அம்மாவிடம்
 காசு வாங்கலாம்;
 பெரும்பணத்தால் அம்மாஅன்பை
 வாங்க முடியுமா?
 
 முடிவெடுத்துச் செய்யும்பணியில்
 மாற்றம் நேரலாம்;
 முயற்சி ஏதும் செய்திடாமல்
 வெற்றி கிட்டுமா?
 
 படிப்படியாய் ஏறிப்போகப்
 முதலில் பழகலாம்;
 பறந்து போகும் காலம் வரும்
 பின்னர்ப் பார்க்கலாம்!
 
-கிருங்கை சேதுபதி
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com