நம்பிக்கை!: முத்துக் கதை!

அந்த ஆற்றில் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளப்பெருக்கத்தில் மாடுகள், ஆடுகள் ஏன்?...
நம்பிக்கை!: முத்துக் கதை!

அந்த ஆற்றில் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளப்பெருக்கத்தில் மாடுகள், ஆடுகள் ஏன்?... குதிரைகள் கூட நீர் போன போக்கில் அடித்துப் போயின. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆற்றின் இருகரைகளையும் தொட்டு வெள்ள நீர் ஒடுவதைக் காண ஜனங்கள் குழுமியிருந்தார்கள்.

ஆற்று வெள்ளம் பார்க்க அப்பாவுடன் வந்திருந்தாள் சிறுமி சித்ரா. அவள் அப்பாவிடம் அர்த்தம் பொதிந்த கேள்வி ஒன்றைக் கேட்டாள். 

""அப்பா, ஆடு, மாடு குதிரை எல்லாம் பலமானதுதானே..... தண்ணீரை அவைகளால் எதுத்து வர முடியலையே.... சின்னஞ்சிறு மீன் குஞ்சுகள் மட்டும் எப்படி இவ்வளவு பெரிய வெள்ள நீரை எதுத்து நீந்தியும் நீர் போகிற போக்கில் போய் விளையாடுதுங்களே...''

""நம்பிக்கைதான் சித்ரா!.... வெள்ளத்தில் அடிச்சுட்டுப் போகிற ஆடு, மாடுகளைத் தூக்கிக் கரையில் போட்டோம்னு வை... அதுங்க பொழைச்சுக்கிடுங்க.... மீன்களைத் தூக்கிப் போட்டா என்ன ஆகும்?.... செத்துப் போயிடும்!.... தண்ணீர் நம்மளக் காப்பாத்தும்னு தண்ணீர் மேலே மீன் அளவில்லா நம்பிக்கை வெச்சிருக்கு!....அதனால தண்ணியும் மீன்கள் எதுத்துப் போறசதுக்கும் தண்ணீர் போன போக்கில் போறதுக்கும் அனுமதிக்கிறது...''

அப்பாவின் பதில் சித்ராவின் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்தது. ஆது மட்டுமல்ல.... யார் மீதும், எதன் மீதும் பரிபூரண நம்பிக்கை வைத்தால் நன்மைகளே கிடைக்கும் என்கிற கருத்தையும் அவளின் மனதில் விதைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com