Enable Javscript for better performance
"ஃபீனிக்ஸ் பறவை' யூகலிப்டஸ் மரம்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி

     "ஃபீனிக்ஸ் பறவை' யூகலிப்டஸ் மரம்!

    By DIN  |   Published On : 18th May 2019 10:00 AM  |   Last Updated : 18th May 2019 10:00 AM  |  அ+அ அ-  |  

    sm9

    மரங்களின் வரங்கள்!

     என்ன குழந்தைகளே நலமாக
     இருக்கிறீர்களா ?
     நான் தான் யூகலிப்டஸ் மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் யூகலிப்டஸ்ரெக்னன்ஸ், குடும்பப் பெயர் மிர்டேஷியே என்பதாகும். நான் ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டவன். உலகிலுள்ள உயரமான மரங்களுள் நானும் ஒருவன். என் இலைகள் கீழ்நோக்கியே தொங்கும். சூரியனின் வெப்பம் நேரடியாகத் தாக்கி நீர் ஆவியாகாமல் இருப்பதற்கு இயற்கையே எனக்கு இவ்வமைப்பை வழங்கியுள்ளது.
     என்னிடம் இன்னொரு சிறப்பு குணமும் உண்டு. காட்டுத் தீயில் சிக்கினாலும் நான் மீண்டும் முளைத்தெழுவேன். அதாவது என் மரத்தின் உள்ளேயும், வேர்களின் உள்ளேயும் டார்மன்ட் ஷுட் எனப்படும் செயலற்ற தளிர்கள் ஒளிந்திருக்கும். தீயின் வெப்பம்படும் போது ஒரு வகை ஹார்மோனால் தூண்டப்பட்டு. அந்தத் துளிர்கள் மீண்டும் முளைவிடும். சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போல, என்னையும் ஃபீனிக்ஸ் மரம் என்று சொல்லலாம். நான் 250 ஆண்டுகள் கடந்தும் உயிர் வாழ்வேன்.
     என் இலையை பசையாக அரைத்து படை, சொறி, சிரங்கு மேல் தேய்த்து வந்தால் அவைகள் இருந்த இடம் தெரியாது. நான் காகிதம், காகிதக் கூழ், துகள் அட்டைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கவும், எரிபொருள், கரித்துண்டுகள் தயாரிக்கவும், எளிய மற்றும் கனமான கட்டுமானப் பணிகளுக்கும், இரயில்வே தண்டவாளக் கட்டைகள், பாலங்கள் கட்டுவதற்கும் பெரிதும் உதவுகிறேன். என் இலைகளைப் பறித்து சாறு எடுக்கிறார்கள். அதை ஆவியாக்கி எண்ணெய் தயாரிக்கிறார்கள். இந்த எண்ணெய் சிறந்ததொரு கிருமிநாசினி. இந்த எண்ணெய் மருத்துவத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும், வாசனைக்கும் பெரிதும் உதவுகிறது.
     குளியல் சோப்புகள் தயாரிக்கவும் நான் உதவுகிறேன். கொப்புளங்கள், சிறு காயங்கள், வெட்டுகள் மற்றும் சிராய்ப்புகளை குணமாக்கவும், தோல் எரிச்சல், பூச்சிக்கடி, தசைவலி, ஆஸ்துமா, மார்பு சளி, காய்ச்சல் ஆகியவற்றுக்கு என் எண்ணெய் சிறந்த நிவாரணி.
     சூடான நீரில் கொஞ்சம் யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து பருகினால் இரத்தசோகை, அழற்சி ஆகியவை நீக்குவதோடு, குடலிலுள்ள கிருமிகளையும் நீக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் யூகலிப்படஸ் எண்ணெய் உட்கொண்டால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். என்னுடைய அனைத்து பாகங்களும் சாயத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. கடினமான தசை புண், சுளுக்கு, தசைநாள், நரம்புகளில் வலி போன்ற தீவிர பிரச்சினைகளுக்கு அனைத்திற்கு யூகலிப்டஸ் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் தலை வலி பறந்தோடி விடும். சுரங்கத் தொழிற்சாலையில் தாதுக்ககளைப் பிரித்தெடுப்பதற்கு என் எண்ணெய் பயன்படுகிறது.
     குழந்தைகளே, என்னைப் பற்றி நிறைய குறைகள் சொல்கிறார்கள். அது எனக்கு வருத்தமா இருக்கு! அதாவது, நான் ஓரிடத்தில் இருந்தால் தண்ணீரை வேகமாக உறிஞ்சிடுவேனாம்!..., மற்ற தாவரங்களை வளர விட மாட்டேனாம்!...., கூட்டமா நாங்கள் இருந்தால் நிலத்தடி நீர் மட்டம் ரொம்பக் குறையும் என்றும், அதனாலே என்னை முற்றாக அழிக்கணும்னும் சொல்றாங்க! அது எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்குத் தெரியல. ஆனால், நான் கடுமையான வறட்சியையும் தாங்கி வளருவேன் என்பது மட்டும் உண்மை. நானும் மற்ற மரங்களைப் போல இலைகளின் மூலம் ஒளிச்சேர்க்கை நடத்தி நீரை ஆவியாக்குகிறேன். நான் சூற்றுச்சூழலை பாதிப்படைய செய்ய மாட்டேன், மண்ணின் ஈரப்பதத்தையும் கெடுக்க மாட்டேன், யூகலிப்டஸ் மரத்தால் 70 சதவீதம் நன்மைதான், இப்படியே நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது என்ற காரணத்திற்கான இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டினால் பல வகையான மரங்களை வெட்ட வேண்டியது தான்! மரங்கள் எப்போதும் காக்கப்பட வேண்டும் என்று தாவரவியல் அறிஞர்கள் எங்களுக்கு ஆதரவாக சொல்வதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
     (வளருவேன்)
     -பா.இராதாகிருஷ்ணன்
     
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp