முகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி
விடுகதைகள்
By DIN | Published On : 18th May 2019 10:00 AM | Last Updated : 18th May 2019 10:00 AM | அ+அ அ- |

1. மளிகைக் கடையில் இருப்பாள் இந்த ராணி...
2. காலையில் வந்த விருந்தாளி, மாலையில் போய் விடுவார்... யார் இவர்?
3. கருப்பர்கள் விடை பெற்றவுடன் வெள்ளையர் வந்து கூடி விட்டனர்...
4. எட்டாத உயரத்தில் இனிப்பு மிட்டாய் பொட்டலம்...
5. அக்காவின் நிறம் கருப்பு ஆனால் அவள் குரலோ இனிப்பு...
6. நாடெல்லாம் ஓடுவான், ஓரிடத்திலே கூடுவான்...
7. மணக்கும் குணமிருந்தாலும் கசக்கும் பெயர்தான் இதற்கு...
8. அடுக்கி வைத்த அழகு மணி, ஓசையில் கொலுசு மணி, ஒய்யாரமாய் ஒளிந்திருக்கு...
விடைகள்:
1. சாம்பிராணி, 2. சூரியன்
3. நரைமுடி (தலைமுடி)
4. தேன்கூடு, 5. குயில்
6. ஆறு, 7. கறிவேப்பிலை
8. வெண்டைக்காய்
}ரொசிட்டா