Enable Javscript for better performance
அங்கிள் ஆன்டெனா- Dinamani

சுடச்சுட

    
    sm12


    கேள்வி: கரியமில வாயு (கார்பன் டை ஆக்ûஸட்) உடலுக்கும் உலகுக்கும் கேடு விளைவிக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த வாயுவை எங்கேயாவது கொண்டு போய் நமக்குப் பாதிப்பு வராதவாறு செய்ய முடியாதா?

    பதில்: இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, நாம் பூமியின் மேற்புறத்தை கார்பன் டை ஆக்ûஸடால் நிரப்பி வந்திருக்கிறோம். பலவிதமான எரிபொருள்களால் நாம் இந்தத் தீச் செயலை செய்து வந்திருக்கிறோம்.

    திடீரென்று விழித்துக் கொண்டு இந்த வாயுவை அடக்கி வைப்பதற்கு வழிகளைத் தேடுகிறோம்.

    கார்பன் டை ஆக்ûஸட் சேர்ந்து கொண்டே போவதை எப்படியாவது தடுத்தே தீர வேண்டும். அதுதான் எதிர்கால சந்ததியினருக்கு நன்மை பயக்கும்.

    சில ஆராய்ச்சியாளர்கள், இந்த வாயுவை பழைய, பயன்படாத பெட்ரோலியக் கிணறுகளின் ஆழத்தில் கொண்டுபோய் விட்டு விடலாம் என்றும் மற்றும் சிலர் கடலுக்கடியில் மிக ஆழத்தில் கொண்டு போய் விட்டு விடலாம் என்றும் கருதுகிறார்கள். ஆனால், அப்படியே கொண்டு போய் புதைத்தாலும் எவ்வளவு காலத்துக்கு அது அங்கேயே இருக்கும் என்பதைச் சரியாகக் கணிக்க முடியாது என்கிறார்கள்.

    கார்பனை டை ஆக்ûஸடின் தேவையும் உலகிற்கு வேண்டியதிருப்பதால் இதை எப்படிச் செய்து முடிப்பது என்று விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் சீக்கிரம் இதற்கு சரியான வழியைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நம்புவோம்! .

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai