நினைவுச் சுடர்!: பிறந்த நாள்!

அந்தப் பெரிய மாளிகை கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அன்று அந்த மாளிகையில் வசிக்கும் செல்வந்தரின் மகனுக்குப் பிறந்த நாள்!
நினைவுச் சுடர்!: பிறந்த நாள்!


அந்தப் பெரிய மாளிகை கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அன்று அந்த மாளிகையில் வசிக்கும் செல்வந்தரின் மகனுக்குப் பிறந்த நாள்! எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர். சுவை மிகுந்த இனிப்புகள் தயாரிக்கப்பட்டன. ஒரு பெரிய தராசு வரவழைக்கப்பட்டது! அதில் ஒரு தட்டில் தன் மகனை உட்கார வைத்தார் செல்வந்தர்! 

மற்றொரு தட்டில் இனிப்புகள் வைக்கப்பட்டன! எடைக்கு எடை இனிப்புகள்! 

அவற்றை ஒரு பெரிய தட்டில் வைத்துக் கொண்டு வந்தார்கள். மாளிகை வாசலில் ஏழை, எளியவர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது! பிறந்த நாள் கொண்டாடும் சிறுவன் தன் பிஞ்சுக் கைகளால் அனைவருக்கும் இனிப்புகளை வழங்குகிறான்! 
அனைவருக்கும் மகிழ்ச்சி! இனிப்பைப் பெற்றுக்கொண்டு அனைவரும் சிறுவனை வாழ்த்தினர்! 

சிறுவன் தன் தந்தையைப் பார்த்து, ""அப்பா!.... எனக்கு தினமுமே பிறந்தநாள் கொண்டாடக்கூடாதா?'' என்று வெகுளித்தனமாகக் கேட்டான்!

""ஏன் அப்படிக் கேட்கிறாய்?'' என்று கேட்டார் அப்பா.

"" எனக்கு இனிப்பை அனைவருக்கும் வழங்குவதும், அவர்கள் வாழ்த்தைப் பெறுவதும் ரொம்பப் பிடிச்சிருக்குப்பா!'' 

அந்தச் சிறுவன் பின்னாளில் மகாத்மா காந்தியின் பிரதம சீடரானார். அது மட்டுமல்ல!... இந்தியாவின் முதல் பிரதம மந்திரியும் ஆனார். ஆம்! அவர்தான் நம் குழந்தைகள், "நேரு மாமா' என அன்புடன் அழைக்கும் பண்டித ஜவஹர்லால் நேரு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com