அங்கிள் ஆன்டெனா

 மனிதர்கள் எப்போது பேசக் கற்றுக் கொண்டார்கள்? மொழி என்பது எப்படி உருவானது என்று சொல்ல முடியுமா?
அங்கிள் ஆன்டெனா

கேள்வி:
 மனிதர்கள் எப்போது பேசக் கற்றுக் கொண்டார்கள்? மொழி என்பது எப்படி உருவானது என்று சொல்ல முடியுமா?
 பதில்: சார்லஸ் டார்வினின் கொள்கையான பரிணாம வளர்ச்சிதான் மனிதனைப் பேச வைத்தது என்கிறார்கள் பல ஆராய்ச்சியாளர்கள்.
 அப்படியானால், மனிதனைப் போலவே விலங்குகளும் பறவைகளும் ஏன் பேசவில்லை? மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே விலங்குகளும் பறவைகளும் உலகில் இருக்கின்றனவே, அவை பரிணாம வளர்ச்சி அடைந்துதானே இருக்கும். அவை மட்டும் ஏன் பேசவில்லை, அவற்றுக்கு ஏன் மொழிகள் இல்லை என்ற கேள்விளும் இருக்கின்றன. இதற்கும் பலவித பதில்கள் உள்ளன. ஆனாலும் அவையெல்லாம் முழுமையான முடிவான பதில்களாக இல்லை.
 சரி, மனிதன் மட்டும் எப்படிப் பேசக் கற்றுக் கொண்டான் என்று பார்த்தால் மனித மூளை மற்ற உயிரினங்களின் மூளையை விட மிகவும் மேம்பட்டதாக இருப்பதுதான் என்கிறார்கள்.
 ஆனால், இன்னும் இந்த ஆண்டுதான் அல்லது இந்தக் காலத்தில்தான் மனிதன் பேச ஆரம்பித்தான் என்று யாராலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.
 சிலர், மனிதன் பேசவும் மொழியைப் பயன்படுத்தவும் ஆரம்பித்து வெகு காலத்துக்குப் பிறகுதான் இப்போது நாம் இருக்கும் நிலைக்கு வந்திருக்கிறான் என்று கூறுகிறார்கள். ஒரே நாளில் வந்தது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம் என்பதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனெனில் நாம் இன்னும் கற்றுக் கொண்டேதானே இருக்கிறோம், புதிது புதிதாகக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோமே?
 - ரொசிட்டா
 அடுத்த வாரக் கேள்வி
 நெருப்பு இப்போது பல வழிகளில் நமக்கு உதவி செய்கிறது. இந்த நெருப்பை மனிதன் எப்போது, எப்படிக் கண்டுபிடித்தான்?
 பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம்
 நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com