எச்சம் இட்ட காக்கை!

 வண்டியில் நானும் செல்கையிலே வரிசையாகக் காக்கைகள்!
எச்சம் இட்ட காக்கை!

கதைப்பாடல்...
 வண்டியில் நானும் செல்கையிலே
 வரிசையாகக் காக்கைகள்!
 என் மேல் பறந்து சென்றனவே! - அதில்
 எச்சம் இட்டது ஒரு காக்கை!
 அன்று நானும் புது ஆடை
 அணிந்து கொண்டு சென்றிருந்தேன்!
 திடுமென காக்கை எச்சம் கண்டு
 திகைத்து நானும் சினமுற்றேன்!
 தினமும் காக்கைகள் வந்துவிடும்
 அனுதினமும் அதற்குச் சோறிடுவேன்!
 "இனி ஒரு போதும் இடுவதில்லை!''
 என சினமுடன் மனதில் உறுதியுற்றேன்!
 ஒரு நாள் என்அன்புத் தங்கை - எனக்கு
 குழம்புடன் சோற்றை ஊட்டிவிட்டாள்! - தவறிச்
 சிந்திக் "கறை' என் சட்டையிலே! - ஆனால்
 சினமோ அவள் மேல் கொள்ளவில்லை!
 இயல்பால் நடக்கும் செயலிதுவே! - அன்பு
 கொண்ட மனதில் சினமில்லை!
 காக்கை மீது இப்போது
 ஏனோ அன்பு பிறந்ததுவே!
 நன்றே செய்வேன் இனிமேலே
 நலமுடன் காப்பேன் உயிர்களையே
 வாசலில் "கா!.... கா!....'' என சத்தம்!
 விரைந்து சென்றேன் உணவளிக்க!
 - சேவு.முத்துக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com