கடி

"அவனைக் கடைக்கு அனுப்பி நாலு பொருள் வாங்கி வரச்சொன்னா, ஒண்ணை மறந்துபோய் விட்டுட்டு மூணு பொருள்தான் வாங்கிக்கிட்டு வருவான்!''
கடி

* "அவனைக் கடைக்கு அனுப்பி நாலு பொருள் வாங்கி வரச்சொன்னா, ஒண்ணை மறந்துபோய் விட்டுட்டு மூணு பொருள்தான் வாங்கிக்கிட்டு வருவான்!''
"யாரு அவன்?''
"என்னோட ஒண்ணு விட்ட தம்பி!''
எஸ்.வேல் அரவிந்த், குளத்தூர் - 624005.

* "நீ என்ன பேஸ்ட் யூஸ் பண்றே?''
"பட்டாபி பேஸ்ட்!''
"என்ன சோப் யூஸ் பண்றே?''
"பட்டாபி சோப்!''
"இது என்ன புது ப்ராண்டா இருக்கு!....''
"அதெல்லாம் ஒண்ணுமில்லே!..... பட்டாபி என்னோட ஹாஸ்டல் மேட்!''
க.நாகமுத்து, காளனம்பட்டி.

* "தாத்தா வேர்க்கடலை சாப்பிட்டா என்னோட உடம்புக்கு நல்லதுன்னு சொன்னியா?''
"ஆமாம்.... எதுக்குக் கேக்கறே?''
"அதெப்படி தாத்தா!..... நீ வேர்க்கடலை சாப்பிட்டா எனக்கு எப்படி நல்லதாகும்?'' 
எம்.சரவணன், வீரணம், 
சாத்தனூர் - 606706.

* "கீழே முள் இருக்கு பாரு!.... அதை எடுத்து ஓரமா போடு!''
"இன்னோரு முள் வேணுமே!''
"எதுக்குடா?''
"முள்ளை முள்ளாலதானே எடுக்கணும்!''
ஜி.சுந்தரராஜன், 479, வடக்கு ரத வீதி, 
திருத்தங்கல், 626130

* "நீ ஏரியிலே யானை பாத்திருக்கியா?''
"ஏரியிலே யானையும் பார்த்திருக்கேன்!..... யானையிலே ஏறியும் பார்த்திருக்கேன்!''
மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

* "எதுக்கு பையனை ஆர்.டி.ஓ. ஆபீஸுக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்க?''
"அவனுக்கு எட்டு போடவே வரலே!.... அதான்!''
எம்.ஏ.நிவேதா, 
அரவக்குறிச்சிப்பட்டி - 620015
வாரம் 2 டி-சர்ட் பரிசு நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com