அங்கிள் ஆன்டெனா

சூரிய கடிகாரம் என்று சொல்கிறார்களே அது எப்போது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது.?
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: சூரிய கடிகாரம் என்று சொல்கிறார்களே அது எப்போது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது.?

பதில்: சூரியக் கடிகாரம் பார்த்திருக்கிறீர்களா? 

மாதிரிக்கு ஒன்று அருகில் தரப்பட்டுள்ளது.

இந்தக் குச்சியின் நிழல் விழும் இடத்தில் எண்கள் குறிக்கப்பட்டிருக்கும். அதை வைத்து நேரத்தைக் கண்டு கொள்வார்கள். இதுதான் சூரியக் கடிகாரம்.

கி.மு. 560-இல் இது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுப்படுகிறது. ஹெரொடட்டஸ் என்ற கிரேக்க அறிஞர் பாபிலோனிய அறிஞர்கள்தான் சூரியக் கடிகாரத்தைக் கண்டுபிடித்தவர்கள் என்று கூறியிருக்கிறார். இந்த சூரியக் கடிகாரத்தில் பல வகைகள் உள்ளன. வலைத்தள வசதி உங்களிடம் இருந்தால் அதில் தேடிக் கண்டுபிடித்துப் பாருங்கள்.

உலகின் மிகப் பழமையான சூரியக் கடிகாரம் அருகில் உள்ளது. இது எகிப்து பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com