மண்ணெல்லாம் பொன்னாக
மழை நீர் சேமிப்போம்!
அனைத்துயிரும் செழித்தோங்க
மழை நீர் சேமிப்போம்!
உண்ண உடுத்த வசித்திடவே
மழை நீர் சேமிப்போம்!
மண்ணகமே நலமாக
மழை நீர் சேமிப்போம்!
குட்டை குளம் நிரம்பிடவே
மழை நீர் சேமிப்போம்!
மொட்டை மாடி மழை நீரை
நிலத்தடியில் சேமிப்போம்!
கண்மாய் ஏரியெல்லாம்
மழை நீர் சேமிப்போம்!
கண்போல நலம் பேணி
மழை நீர் சேமிப்போம்!
மனைகளோடு உழவோங்க
மழை நீர் சேமிப்போம்!
அணை போலக் காத்து நின்று
மழை நீர் சேமிப்போம்!
எக்கணமும் சிக்கனத்தை
ஏற்று நாம் வாழ்ந்திடவே
தக்கதெனும் நீர்வளமாம்
மழை நீர் சேமிப்போம்!