சுடச்சுட

  
  sm12

  கேள்வி: நம்மைப் பார்த்தாலே பயந்து ஓடும் எலிகளுக்கு ஏதாவது விசேஷ சக்தி இருக்கிறதா?

  பதில் :நிலத்துக்கு அடியில் நம்மால் சிறிது நேரம்கூடத் தாக்குப் பிடிக்க முடியாது. ஆனால் எலிகளுக்கு இயற்கை சில ஸ்பெஷல் சக்திகளைத் தந்திருக்கிறது. எலிகள் வளை தோண்டுவதில் கில்லாடிகள்.
  அதுவும் இந்திய எலிகளை விட அமெரிக்க எலிகள் கில்லாடிக்குக் கில்லாடிகள். அங்கு வாழும் கோப்பர் காஃபர் என்ற எலி இனத்தைச் சேர்ந்தவை மிக வேகமாக வளை தோண்டக்கூடியவை.
  ஒரே இரவில் 300 அடி ஆழத்துக்குக் குழி தோண்டி விடும். இது ஒரு சுரங்கப்பாதை போலச் செல்லும். இந்தச் சுரங்கப் பாதையின் முடிவில் இருக்கும் வீட்டில் பல அறைகள் இருக்குமாம்.
  அந்த அறைகளில் ஒன்று டாய்லெட் என்று கூறுகிறார்கள். இது ஆச்சரியமாக இல்லை?
  -ரொசிட்டா
  அடுத்த வாரக் கேள்வி
  அதிவேகமா ஓடக்கூடிய மான்களைக்கூட சிங்கம் புலி போன்றவை அடித்துச் சாப்பிட்டு விடுவதை டிஸ்கவரி சேனலில் அடிக்கடி காட்டுகிறார்கள். மான்கள் இப்படி அநியாயமாக உயிரிழப்பதற்காகாத்தான் படைக்கப் பட்டுள்ளனவா?
  பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் 
  நல்ல பதில் கிடைக்கும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai