சுடச்சுட

  

  1. ஆயிரம் தடவை ஆடினாலும் அயராத பெண்கள் யார்?.
   2. உன்னை வந்து அழுத்தும், ஆனால் உனக்குத் தெரியாமல் இருக்கும்...
   3. ஆடச் சொல்லி சட்டை போடுவார், ஆடும் முன்பே கழற்றி விடுவார்...
   4. அப்பா வீட்டுக் குதிரை, அற்புதமான குதிரை, காதைப் பிடித்தால் வாயால் கடிக்கும்...
   5. வேகமாகப் போகிற அம்மணிக்கு விழுந்த கைக்குட்டையை எடுக்க நேரமில்லை...
   6. பல்லைப் பிடித்து அழுத்தினால் பதறிப் பதறி நான் அழுவேன்...
   7. கழனியிலே கதிர் விளையும் கையால் பறிக்க மாட்டேன், கத்திரியால் வெட்டிடுவேன்...
   8. முண்டாசு கட்டின சின்னப் பையன், வீட்டுச் சுவரில் முட்டி வெளிச்சம் போட்டு மயங்கிப் போனான்...
   விடைகள்
   1. கண் இமைகள், 2. தூக்கம், 3. பம்பரம்,
   4. கத்தரிக்கோல், 5. பறவையின் இறகு,
   6. ஹார்மோனியம் அல்லது பியானோ,
   7. தலைமுடி, 8. தீக்குச்சி.
   -ரொசிட்டா
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai